மின்னம்பலம்
பெண்களின் உள்ளம் கவர்ந்த பண்டிகைகளில் முதல் இடம் பிடிப்பது நவராத்திரிதான். இந்த நவராத்திரி நேரத்தில், இல்லத்தில் சிறப்பாக தயாரித்து, அம்மனுக்குப் படைத்து, வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி, நமக்கு வேண்டியவர்களுடன் பகிர்ந்துகொண்டு, அவர்களின் பாராட்டு மழையில் நனைய வைக்கும் சுண்டல்களில் முக்கிய இடம் பிடிக்கும் சுண்டல், வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்
என்ன தேவை?
வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்து, பெருங்காயம் - தலா அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்தது கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் வெந்த கொண்டைக்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.