மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

பிப்ரவரி 1: பட்ஜெட் தாக்கலாகிறது!

பிப்ரவரி 1: பட்ஜெட் தாக்கலாகிறது!

2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரான அன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதற்கு அடுத்த நாள் பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். அதில், பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றுவர்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 தொடங்கி பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிறிது இடைவெளி விட்டு மார்ச் 2ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகளிலும் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தீவிரமாகப் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின்போது இதுதொடர்பான பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகவுள்ளன.

வியாழன், 16 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon