மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 ஜன 2020

சிஏஏ போராட்டத்தில் குடியரசு தின விழா!

சிஏஏ போராட்டத்தில் குடியரசு தின விழா!

சிஏஏ போராட்டத்தில் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லி ஜாமியா மிலியா அருகேயுள்ள ஷாஹீன் பாக் நகரில் சிஏஏவைத் திரும்பப் பெறக் கோரி பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 26) நாடு முழுவதும் குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதேபோல ஷாஹீன் பாக் பகுதியிலும் போராட்டக்காரர்கள் குடியரசு தினத்தைக் கொண்டாடினர்.

ஐதராபாத் ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா, மாட்டுக் கறியைக் கொண்டுசென்றதற்காக ஓடும் ரயிலில் படுகொலை செய்யப்பட்ட ஜுனைத் கானின் சரியா பனோ ஆகியோர் அங்கு மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்தனர். போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் தேசிய கீதத்தை பாடி, அரசியலமைப்பின் முன்னுரையை வாசித்தனர். அதோடு, பாரத் மாதா கீ ஜெய், விசாரணை ஜிந்தாபாத், என்ஆர்சி, சிஏஏ, முர்தாபாத் போன்ற முழக்கங்களையும் எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 5,000 பேர் கலந்துகொண்டனர்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஷாஹீன் பாக் நகரை குட்டி பாகிஸ்தான் என பாஜக விமர்சித்து வரும் நிலையில், குடியரசு தினத்தன்று போராட்டத்தில் இருக்கும்போதே தங்களது நாட்டுப்பற்றையும், தேசப்பற்றையும் நிரூபித்துள்ளனர் அப்பகுதி மக்கள் என்கிறார்கள்.

கேரளாவில் மனிதச் சங்கிலி

சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில் இடது முன்னணி ஆட்சி நடைபெறும் கேரளாதான் முன்னணியில் உள்ளது. சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டிலேயே கேரள சட்டமன்றத்தில்தான் முதன்முதலாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் குடியரசு தினக் கொண்டாட்டத்துக்குப் பிறகு சிஏஏவை திரும்பப் பெறக் கோரி கேரளாவில் காசர்கோடு முதல் களியக்காவிளை வரை 620 கி.மீ நீளத்துக்கு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கனம் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிமுக வேட்பாளர்களின் கடைசி கட்ட கரன்சி திணறல்: எடப்பாடி ஷாக்! ...

4 நிமிட வாசிப்பு

அதிமுக வேட்பாளர்களின் கடைசி கட்ட கரன்சி திணறல்: எடப்பாடி ஷாக்!

அமைச்சரவையில் புதுமுகங்கள்: கொடைக்கானலில் ஸ்டாலின் ஆலோசனை! ...

4 நிமிட வாசிப்பு

அமைச்சரவையில்  புதுமுகங்கள்: கொடைக்கானலில் ஸ்டாலின் ஆலோசனை!

விவேக்கிற்கு 4 பெண் குழந்தைகள்!

4 நிமிட வாசிப்பு

விவேக்கிற்கு 4 பெண் குழந்தைகள்!

திங்கள் 27 ஜன 2020