மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 25 பிப் 2021

பத்திரிகைகள் மீதான தமிழக அரசின் வழக்குகள் ரத்து!

பத்திரிகைகள் மீதான தமிழக அரசின் வழக்குகள் ரத்து!

மின்னம்பலம்

பத்திரிகைகள் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு தமிழக அரசுக்கு எதிராக செய்திகள் வெளியிடும் பத்திரிகைகள் மீது அதிகமான அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அப்படி தமிழக அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகக் கூறி பல்வேறு காலகட்டங்களில் தி இந்து, முரசொலி, டைம்ஸ் ஆப் இந்தியா, நக்கீரன், தினமலர், உள்ளிட்ட பத்திரிகை நிறுவனங்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் மீது அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டன.

முரசொலி நாளிதழ் மீது 20 வழக்குகளும், டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, நக்கீரன் மற்றும் தினமலர் மீது தலா 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு தொடரப்பட்ட வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பத்திரிகை நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட 28 வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி அப்துல் குத்தூஸ், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் இன்று (மே 21) தீர்ப்பளித்த நீதிபதி, “பத்திரிகைகள் அவர்களின் கடமைகளை செய்யும்போது, அவர்கள் மீது எப்படி அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன” என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் அனைத்து பத்திரிகைகள் மீதும் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.

எழில்

வியாழன், 21 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon