மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 மே 2020

பாஜகவில் இணையும் வி.பி.துரைசாமி

பாஜகவில் இணையும் வி.பி.துரைசாமி

பாஜகவில் இணையவுள்ளதாக திமுக முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி. துரைசாமி கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று தமிழக பாஜக தலைவர் எல். முருகனை சந்தித்தார். இது சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக திமுகவில் மரியாதை இல்லை! - வி.பி. துரைசாமி -முருகன் சந்திப்பு பின்னணி! என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டோம்.

இதுதொடர்பாக நேற்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்த வி.பி.துரைசாமி, “ஸ்டாலினிடம் என்னைப் பற்றி பலர் தவறான தகவல்களை சொல்கிறார்கள். என் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இல்லை” என்று கூறியிருந்தார். அடுத்த சில மணி நேரங்களில் வி.பி.துரைசாமியிடமிருந்த துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜுக்கு அளிக்கப்பட்டது. விரைவில் அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு கமலாலயம் சென்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் மூத்த தலைவர்களை சந்திக்கும் வி.பி.துரைசாமி, பாஜகவில் தன்னை இணைத்துக்கொள்கிறார். பிறகு இருவரும் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.

இதுதொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த வி.பி.துரைசாமி பாஜகவில் இணையவுள்ளதாக தெரிவித்தார். மேலும், “துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிப்பு என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். கலைஞர் அழைத்தார் என்பதற்காக 2001ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு வந்தேன். என்னை துணை சபாநாயகராக்கி அழகு பார்த்தார். இப்போது, திமுகவின் அடிமட்ட தொண்டர் பொறுப்பில் இருந்து என்னை நீக்குமாறு தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்! ...

3 நிமிட வாசிப்பு

தேர்தல் முடிவு:  எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

குடும்பத்தோடு கொடைக்கானல் டூர்: அமைச்சரவைப் பட்டியலை ரெடி செய்யும் ...

3 நிமிட வாசிப்பு

குடும்பத்தோடு கொடைக்கானல் டூர்: அமைச்சரவைப் பட்டியலை ரெடி செய்யும் ஸ்டாலின்

மே 6: ஸ்டாலினுக்காகக் குறித்த தேதி!

3 நிமிட வாசிப்பு

மே 6: ஸ்டாலினுக்காகக் குறித்த தேதி!

வெள்ளி 22 மே 2020