மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

“நாம் செலுத்தும் 270% வரி” - ஜெ.ஜெயரஞ்சன்

“நாம் செலுத்தும் 270% வரி” - ஜெ.ஜெயரஞ்சன்

ஊரடங்கால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்து நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெயரஞ்சன் தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில் இன்று (மே 26) பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தனது கருத்துக்களை எடுத்துவைத்தார்.

உலகிலுள்ள பெரிய நாடுகளை எடுத்துக்கொண்டால் பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரி விதிக்கக் கூடிய நாடு இந்தியாதான். கச்சா எண்ணெய்யை 200 ரூபாய்க்கு இந்தியா வாங்குகிறது என்று யாருக்கும் தெரியாது. அது இந்தியாவுக்கு வந்து இறங்கும்போது என்னென்ன கோளாறுகள் நடக்கிறது என்பதும் தெரியாது என்று கூறினார்.

மது, புகையிலை, சிகரெட்டுகள் ஆகியவற்றை sin goods அதாவது பாவப் பொருட்கள் வரி என்று தனியாக வகைப்படுத்தி அதற்கு அதிகமான வரியை விதிக்கிறார்கள் என்று குறிப்பிடும் ஜெயரஞ்சன், “ அதிக வரி விதிப்பதால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இந்த பொருட்களை வாங்குவதற்கு தயங்குவார்கள் என்பது அதற்கு ஒரு காரணம். பெட்ரோல், டீசல் ஆகியவையும் அதுபோல sin goods வரிசையில் வகைப்படுத்துகிறார்களா? 270 சதவிகிதம் வரி விதிக்கும் அளவுக்கு அவை பாவப்பட்ட பொருளா?” என்ற கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

மேலும், “சர்வதேச சந்தையில் உள்ள விலை நிர்ணயத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் நிர்ணயிக்கும் முறை கொண்டுவரப்பட்டு, அதன்படி நடைபெறுவதாகச் சொல்கிறார்கள். அதில் எனக்கு பல்வேறு சந்தேகங்கள் உண்டு. ஏனெனில் குஜராத்தில் தேர்தல் நடந்தாலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலோ தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு மேல் பெட்ரோல், டீசல் விலை உயராது. இதற்கு சர்வதேச விலை நிலவரம் காரணம் அல்ல. அரசின் கடைக்கண் பார்வைக்கு இணங்க பெட்ரோலிய நிறுவனங்கள் இயங்குவதுதான் காரணம்” என்றும் கூறினார் ஜெயரஞ்சன்.

அவர் பேசிய முழுக் காணொலியையும் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பார்க்கலாம்.

எழில்

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon