மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

கள்ளக்குறிச்சி: கொரோனா பாதிப்பால் ஓட்டுனர் பலி!

கள்ளக்குறிச்சி: கொரோனா பாதிப்பால் ஓட்டுனர் பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சையிலிருந்த ஒருவர் உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வெகு வேகமாக பரவிவருகிறது. விழுப்புரத்திலிருந்து புதிதாகப் பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சங்கராபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தேவபாண்டலாம் கிராமத்தில் வசிக்கும் தென்னரசு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்துவந்தார்.

கடந்த மாதம் 15ஆம் தேதி இவரது அக்கா தென்னரசி கணவர் மணிக்கு உடல்நலம் சரியில்லாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவரை குடும்பத்தினருடன் சென்று பார்த்து வந்தார். அதன்பிறகு மணிக்கும் தென்னரசிக்கும் கொரோனா தொற்றியிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் தென்னரசுவுக்கு உடல்நிலை சரியில்லை என்று மே 24ஆம் தேதி சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில், மே 26ஆம் தேதி வந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று வந்தது.

இதனையடுத்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தென்னரசு அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று ஜூன் 3ஆம் தேதி மதியம் 2.45 மணிக்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்னரசு மகன் பிரகாஷுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது சங்கராபுரம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

-எம்பி.காசி

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon