மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜுன் 2020

பிகேவால் காங்கிரசுக்குள் கலகம்!

பிகேவால் காங்கிரசுக்குள் கலகம்!

தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸுக்கு பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக காங்கிரஸ் முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு காங்கிரஸுக்குள்ளேயே எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் நடக்க இருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக தேர்தல் உத்திவகுக்கும் பணியை பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் செய்து வருகிறது. இதில் திமுக மாசெக்களுக்கு உடன்பாடு இல்லையென்று தகவல்கள் வந்தன. மே 16 ஆம் தேதி நடந்த திமுக மாசெக்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன், ஐபேக் டீமுக்கு எதிராக கடுமையாகப் பேசினார்.

இந்த நிலையில் வரும் 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸிற்கான தேர்தல் உத்தியை வகுப்பதில் பிரசாந்த் கிஷோரை அமர்த்தலாம் என்று கருதிய அம்மாநில காங்கிரஸ் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் இதுகுறித்து தனது கட்சி எம்.எல்.ஏ.க்களோடு ஆலோசனை நடத்தினார்.

இந்தத் தகவல் அறிந்த காங்கிரஸ் பொதுச் செயலாளரான ஆஷா குமாரி, “யார் அது பிரசாந்த் கிஷோர்? எனக்கு அவர் யார் என்றே தெரியாதே? பஞ்சாப் காங்கிரஸின் தலைவரான சுனில் ஜாகர் இதுபற்றி என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லையே. கட்சி விவகாரங்களில் மாநிலத் தலைவர்தானே முடிவெடுக்க வேண்டும். ஒருவேளை பஞ்சாப் அரசுக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வேண்டுமென்று முதல்வர் அமரிந்தர் சிங் கேட்டிருக்கலாம். அதுபற்றி எனக்குத் தெரியாது” என்று அதிரடியாக கூறினார்.

இந்த நிலையில் இன்று (ஜூன் 5) காணொலி மூலமாக செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அமரிந்தர் சிங், “வரும் 2022 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்காக பணியாற்ற ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதாக பிரசந்த் கிஷோர் என்னிடம் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி நான் அகில இந்திய தலைவர் சோனியா காந்தியிடம் பேசியிருக்கிறேன். இது தொடர்பாக என்னையே முடிவெடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்” என்று இன்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் பிரசாந்த் கிஷோரோ காங்கிரஸுக்கு பணியாற்ற விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். என் டி டிவிக்கு இதுகுறித்துப் பேசியுள்ள கிஷோர், “மத்தியப் பிரதேசத்தில் நடக்க இருக்கும் இடைத் தேர்தலுக்காக அம்மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் என்னை அணுகினார். அவர் மட்டுமல்ல, பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்க என்னை அணுகினார். ஆனால் நான் ஏற்கவில்லை” என்று கூறியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்: ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய ...

3 நிமிட வாசிப்பு

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்: ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்!

முதல்வர் வேட்பாளரை மாற்றினால்...- டிடிவி தினகரனின் டீல்!

4 நிமிட வாசிப்பு

முதல்வர் வேட்பாளரை மாற்றினால்...- டிடிவி தினகரனின் டீல்!

சிறுத்தைகளுக்கு ஐந்து? திமுக கூட்டணியில் அடுத்த கையெழுத்து! ...

3 நிமிட வாசிப்பு

சிறுத்தைகளுக்கு  ஐந்து?  திமுக கூட்டணியில் அடுத்த கையெழுத்து!

வெள்ளி 5 ஜுன் 2020