`சிறையில் சசிகலா உருவாக்கிய கார்டன்

politics

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் போயஸ் கார்டன் விவகாரத்தில் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கும் நிலையில், சிறைக்குள்ளேயே ஒரு கார்டனை உருவாக்கி வருகிறார் சசிகலா.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் சிறையில் இருக்கிறார்கள். சிறை விதிகளுக்கு உட்பட்ட சலுகைகள் மூலம் சசிகலா விரைவில் வெளியே வரக் கூடும் என்று தகவல்கள் வருகிற சூழலில் சசிகலாவோ தான் வளர்த்த சிறை கார்டனில் ஈடுபாடு காட்டி வருவதாகச் சொல்கிறார்கள் சிறைத் துறை வட்டாரங்களில்.

”தோட்ட வேலைகளில் ஆர்வம் காட்டிய சசிகலா, அழகான ரோஜா தோட்டத்தையும் சிறைக்குள் உருவாக்கியுள்ளார். அன்றாட வேலைகளை மணிக் கணக்கில் பிரித்துள்ளார். காலையில் எழுந்தவுடன் ரோஜா தோட்டத்தைப் பராமரிப்பு செய்துவிட்டு, செய்தித்தாள்களை ஒரு மணி நேரம் வாசிக்கிறார், யோகா பயிற்சி, தியானம் என நேரம் ஒதுக்கிச் செயல்பட்டுவரும் சசிகலா தற்போது ரோஜா தோட்டத்தால் நிம்மதியாக இருக்கிறார். சசிகலா வளர்த்துவரும் கார்டனில் இருக்கும் ரோஜா பூக்களை, சிறை நிர்வாகத்தினர் வெளி மார்க்கெட்டில் விற்பனையும் செய்கிறார்கள். அதேநேரம் சுகர் அளவுதான் அவருக்குக் குறையவில்லை” என்கிறார்கள் சிறைக்குள் சென்று அவரை சந்தித்து வந்த தரப்பினர்.

**-வணங்காமுடி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *