Zதிருக்குவளையில் கலைஞருக்கு சிலை!

politics

திருக்குவளையில் அமைக்கப்பட்ட கலைஞர் சிலையை ஸ்டாலின் திறந்துவைத்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையிலுள்ள கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் பிறந்த இல்லத்தில் அவருக்கு சிலை திறப்பு விழா நடைபெற்றது. கலைஞர் சிலையை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலமாக திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஏ.கே.எஸ்.விஜயன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பின்னர் உரையாற்றிய ஸ்டாலின், “கலைஞரின் நினைவு தாங்கிய இடங்களில் எல்லாம் அவரது உருவச் சிலையை அமைக்க நாம் முடிவெடுத்தோம். இன்னும் பல இடங்களில் அமைக்கப்பட்ட சிலைகள் கொரோனா காரணமாக திறக்க முடியாத நிலையில் உள்ளன. இரண்டாமாண்டு நினைவு தினமாக இன்று கலைஞர் பிறந்த திருக்குவளையில், அவர் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவ சிலையை திறந்து வைத்திருக்கிறோம்

கலைஞர் சிலையைப் பார்க்கும்போது, அவரே திருக்குவளை வீட்டிற்கு வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. இது மார்பளவு சிலையாக இருந்தாலும் மன நிறைவு தருவதாக இருக்கிறது” என்று கூறினார்.

சென்னையில் இருந்தாலும் என் நினைவுகள் எல்லாம் இப்போது திருக்குவளையில்தான் நின்றுகொண்டிருக்கிறது எனத் தெரிவித்த ஸ்டாலின், “எல்லா ஊர்களுக்குசென்று வந்திருந்தாலும், பிடித்த ஊர் எது என்று கேட்டால் தான் பிறந்த திருக்குவளை என்றுதான் கலைஞர் சொல்வார். பிறந்த ஊரின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார். சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா என்றுபாடல் வரிகளைப் போல திருக்குவளை மீது அன்பு கொண்டிருந்தார்” என்று பேசினார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *