மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

டிஜிட்டல் திண்ணை: 200 தொகுதிகளில் உதயசூரியன்! - முதல் நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய முடிவு!

டிஜிட்டல் திண்ணை: 200 தொகுதிகளில் உதயசூரியன்! - முதல் நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய முடிவு!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது,

“திமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி புதன்கிழமை நடந்தது. அக்கூட்டம் முடிந்த மறுநாள் 10ஆம் தேதி மாலை திமுக தலைவர் ஸ்டாலின் தன் வீட்டில், கட்சியின் புதிய தலைமைக் கழக நிர்வாகிகளை எல்லாம் வரவழைத்து ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் ஆலோசகர் சபரீசன் ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

ஸ்வீட், காபியுடன் ஆரம்பித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் எல்லாரும் ஸ்டாலினைப் பாராட்டினார்கள். ‘இப்படி ஒரு பொதுக்குழுவை உலகத்தில் வேற எந்த ஒரு கட்சியும் நடத்தவில்லை. கட்சி அமைப்பு, நிகழ்ச்சிகளின் ஒழுங்கு, புதுமையில கலைஞர் காலத்துல இருந்து திமுகவுக்கு ஒரு நேர்த்தி இருக்கு. அந்த நேர்த்தியோடு தொழில் நுட்பமும் சேர்ந்து இப்படி ஒரு பொதுக்குழு நடத்தியதுல உங்க நிர்வாகத் திறமையை பலரும் பாராட்டுறாங்க’ என்று துரைமுருகனில் ஆரம்பித்து பலரும் கூறினார்கள். அதையெல்லாம் புன்முறுவலோடு ஏற்றுக் கொண்ட ஸ்டாலின், ‘உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயத்தை டிஸ்கஸ் பண்ணதான் இங்க வர சொல்லியிருக்கேன்’ என்று சொல்லிவிட்டு ஆரம்பித்திருக்கிறார்.

’நாம சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகள்ல ஏற்கனவே இறங்கிட்டோம். இப்ப இன்னும் தீவிரமாகணும். நமக்காக ஐபேக் தமிழ்நாடு பூரா தொடர்ந்து சர்வே எடுத்துக்கிட்டிருக்காங்க. மாசா மாசம் எடுக்குற அந்த சர்வேக்காக நாம நிறைய செலவு பண்ணிக்கிட்டிருக்கோம். அந்த ரிப்போர்ட்படி அவங்க சொல்றது என்னன்னா, வர்ற தேர்தல்ல திமுக வெறுமனே தேர்தல்ல நின்னாலே 120 சீட் கிடைக்கும். அதாவது எந்த வேலையும் பார்க்காம தேர்தல்ல வேட்புமனு தாக்கல் செஞ்சாலே 120 தொகுதிகள் நமக்குக் கிடைக்கும்னு சொல்றாங்க. நாமதான் ஆட்சி அமைக்குறோம்கறதுல சந்தேகமே இல்லை. இன்னும் தீவிர கவனம் செலுத்தினா 60 சீட்டுகள் நமக்குக் கிடைக்கும். ஆக, நாம தீவிரமா உழைச்சா திமுகவுக்கு 180 சீட்டுகள் உறுதியா கிடைக்கும்னு ஐபேக் சொல்றாங்க.

இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா... நாம கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்குற சீட்டைதான் அதிமுக கவனமாக பாத்துக்கிட்டிருக்கு. நாம கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்குற சீட்டுகள்ல கவனம் செலுத்தலைன்னா அதுல பெரும்பாலும் அதிமுகவுக்கு போகும்னு ஐபேக்ல சொல்றாங்க. நாம கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு சீட் கொடுக்கலாம்னு நினைக்கிறீங்க?’ என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.

அப்போது, ‘இதைத்தான் நாம முன்னால இருந்தே பேசிக்கிட்டிருக்கோம். காங்கிரசுக்கு போனமுறை அள்ளிக் கொடுத்ததுல அவங்க ஒழுங்கா ஜெயிக்காததாலதான் நாம ஆட்சி அமைக்கவே முடியாமப் போச்சு. அதுக்கு முதல்ல 2006ல நாம மெஜாரிட்டி இல்லாமலே வந்தோம். அது கூட நாம அதிக இடங்கள்ல நிக்காம கூட்டணிக் கட்சிகளுக்கு நிறைய கொடுத்துதுதான் காரணம். அந்தத் தப்பை நாம் இனிமே நாம பண்ணக் கூடாது’ என்றனர் நிர்வாகிகள் பலரும்.

கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் கொடுக்குறதுல என்ன ஸ்கேல் வைக்குறது? ஒரு எம்.பி தொகுதிக்கு 3 அசெம்பிளி சீட்னு வெச்சுக்கலாமா என்றும் கேட்டுள்ளார் ஸ்டாலின். அப்போது துரைமுருகன், கணக்கு போட்டு.. ‘அப்படின்னா காங்கிரஸுக்கு 10 எம்.பி சீட் கொடுத்தோம் அவங்களுக்கு 30 சீட் கொடுக்கணும். மதிமுகவுக்கு ஒரு லோக் சபா, ஒரு ராஜ்யசபா - ரெண்டு கணக்கு வச்சா கூட 6 சீட், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6, ரெண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் ஆறு + ஆறு 12, முஸ்லிம் லீக் 3, பாரிவேந்தருக்கு 3, ஈஸ்வரன் கட்சிக்கு 3 கணக்குப் போட்டா கூட 63 வந்துடுது. இதுல எம்பி தேர்தல்ல நாம சீட்டு கொடுக்காத ஜவாஹிருல்லாவும் இருக்காரே... இந்த ஸ்கேல் சரியா வருமா?’ என்று கேட்டிருக்கிறார். அதைத்தாண்டி, ‘கம்யூனிஸ்டுகளுக்கு 12 விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 சீட்டா?’ என்றும் சிலர் கேட்டிருக்கிறார்கள். இப்படியாக விவாதம் தொடர்ந்துகொண்டே இருந்தது.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

திங்கள் 14 செப் 2020