மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

இந்தியாவை இந்தி ஒன்றிணைக்கிறது: அமித் ஷா

இந்தியாவை இந்தி ஒன்றிணைக்கிறது: அமித் ஷா

இந்தியாவை ஒன்றிணைக்கும் சக்தியாக இந்தி இருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திக்கு 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அலுவல் மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதனை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் இந்தி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 14) உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி என்பது இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத பகுதியாகும். சுதந்திர போராட்ட காலத்தில் இருந்து தேசிய ஒற்றுமை மற்றும் அடையாளத்தின் சக்திவாய்ந்த ஊடகமாக இந்தி திகழ்ந்து வருகிறது” என்று புகழாரம் சூட்டினார்.

ஒரு நாடு என்பது புவியியல் அமைப்பு மற்றும் எல்லைகளால் அடையாளம் காணப்படுவதாகத் தெரிவித்த அமித் ஷா, “ஆனால், மிகப்பெரிய அடையாளம் என்பது மொழிதான். கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை நிறைந்த இந்தியாவில், இந்தி பல நூற்றாண்டுகளாக ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒன்றிணைக்கும் சக்தியாக இருந்து வருகிறது” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் சமமான வளர்ச்சியை மனதில் கொண்டே புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வேறு எந்த மொழிகளுடனும் இந்தி போட்டியிடவில்லை. நாட்டு மக்கள் தங்களது தாய்மொழியுடன் இந்தியை பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அதிக பங்களிப்பு செய்வோம் என உறுதிமொழி ஏற்க அழைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட அமித் ஷா, கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எய்ம்ஸில் அவருக்கு கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இந்தி தினத்தை முன்னிட்டு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் அமித் ஷா.

ஏற்கனவே கடந்த ஆண்டு இந்தி தினத்துக்கு, “ ஒரு மொழியால் நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்றால், அது பரவலாக பேசப்படும் இந்தி மொழியால் தான் முடியும்” என்று அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில், மீண்டும் அதே கருத்தை பதிவு செய்துள்ளார்.

எழில்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 14 செப் 2020