மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

100 நாள் வேலைத்திட்டத்தை கொண்டுவந்தவர் மறைவு!

100 நாள் வேலைத்திட்டத்தை கொண்டுவந்தவர் மறைவு!

ஜெ.ஜெயரஞ்சன்

கொரோனா ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து பொருளாதார பாதிப்புகள், புலம்பெயர் தொழிலாளர் விவகாரம், மக்களின் அவதி குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் விரிவாகப் பேசி வருகிறார். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததை விமர்சித்த அவர், எவ்வாறெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் என்பதை தனது பார்வையில் முன்வைத்து வருகிறார்.

100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன் பிரசாத் மறைவையடுத்து, அவரைப் பற்றிய செய்திகளை ஜெயரஞ்சன் இன்று (செப்டம்பர் 14) பகிர்ந்துகொண்டார்.

ஜெயரஞ்சன் பேசுகையில், “கிராமப்புறங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, தேக்கநிலை அடைந்து சீரழிந்துகொண்டிருந்த போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிய பீகாரைச் சேர்ந்த ரகுவன் பிரசாத் சிங் நேற்று மறைந்தார். அவரைப் பற்றி வெளியாகி இருக்கும் கட்டுரைகளைக் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான சோனியா காந்திக்கு ஆலோசனை சொல்ல என்ஜிஓக்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் இருந்தனர். கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்படுகின்றன, அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனக் கூறினர். அவர்களின் எண்ணம் மூலம் உதித்ததுதான் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். சோனியாவின் வற்புறுத்தல் காரணமாக மன்மோகன் சிங்கும், அலுவாலியாவும் அதனை செயல்படுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

அப்போது, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ் கட்சியைச் சேர்ந்த ரகுவன் பிரசாத். 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த அவர் வேகத்துடனும், உறுதியுடனும் செயல்பட்டார். கிராமப்புற மக்களுக்கு வேலையில்லை, அவர்களிடம் பணம் சென்று சேர வேண்டும் என்ற அவருக்கு இருந்த அக்கறையும் மெச்சத்தகுந்தது. அத்திட்டத்தை மன்மோகனும், அலுவாலியாவும் நிராகரிக்க முனைந்து, காரணங்கள் சொல்லும்போதெல்லாம், ‘உங்களுக்கு கிராமப்புறங்களைப் பற்றி, வறுமையைப் பற்றிய அக்கறை இல்லை, நீங்கள் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்’ என அவர்களிடம் வாதிட்டுள்ளார் ரகுவன் பிரசாத். அத்திட்டத்தை வாதிட்டு வென்றெடுத்ததோடு மட்டுமல்லாமல், வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டினார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “ரகுவன் பிரசாத் கணிதத் துறையில் பி.ஹெச்டி முடித்தவர். அபார ஞாபக சக்தி கொண்டிருந்ததால், புள்ளிவிவரங்களை விரல்நுனியில் வைத்துக்கொண்டு பேசுவார். அதனால் அவருடன் விவாதம் புரிய முடியாது. சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோரை வீட்டிற்கு அழைத்துச் சென்று பேசுவதோடு, அவர்களின் வியாபாரம் உள்ளிட்டவை குறித்து விசாரிப்பார்.

அதாவது, அன்றாட நிகழ்வுகளை மக்களிடமிருந்தே தெரிந்துகொள்வார். இதன் வழியாகத்தான் தனது அனுபவ அறிவை பெறுகிறார் ரகுவன் பிரசாத். தன்னுடைய அனுபவம், ஞாபக சக்தி, எண் ஆற்றல் ஆகியவற்றை கிராமப்புற மக்களுக்காகவே பயன்படுத்தியவர் அவர்” என்று புகழாரம் சூட்டினார். இதுபோலவே மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொழிலாளர் நலச் சட்டம் குறித்த தனது விமர்சனங்களையும் ஜெயரஞ்சன் முன்வைத்தார்.

முழுக் காணொலியையும் கீழே காணலாம்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 14 செப் 2020