மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

சசிகலா விடுதலையில் தடையா? மீண்டும் டெல்லி சென்ற தினகரன்

சசிகலா விடுதலையில் தடையா? மீண்டும் டெல்லி சென்ற தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென டெல்லி சென்று பாஜக தலைவரை சந்தித்ததாக தெரிய வருகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் , பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வரும், சசிகலாவின் தண்டனைக் காலம் 2021 ஜனவரி 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடியும் வரையில் சசிகலா வெளியில் வரக்கூடாது என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விருப்பம், தேர்தலுக்கு முன்பு சசிகலா வெளியில் வரவேண்டும் அதிமுக அமமுக இணைந்து தேர்தலை சந்தித்தால் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளை சிதறாமல் பெறலாம் என்பது துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வத்தின் விருப்பம்.

மத்திய உளவுத்துறையினரோ, “ சசிகலா உள்ளிட்டோரை தண்டனைக்காலம் முடிந்தும் விடுதலை செய்யவில்லை என்றால் முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அதிமுகவுக்கு எதிராகத்திரளும்”என்று டெல்லிக்கு நோட் போட்டிருக்கிறார்கள்..

எது நடந்தாலும் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தீராத கோபம் இருப்பதாக சொல்கிறார்கள் பாஜகவினர்.

சசிகலா என்ற பெண்ணின் விடுதலையை மையமாக வைத்து இத்தனை அரசியல் காய்கள் நகர்த்தப்பட்டு வரும்நிலையில்... அமமுக,வினர் சசிகலாவை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை ரகசியமாக செய்துவருகிறார்கள்.

இந்த சூழலில்தான், ஜனவரி 7ஆம் தேதி, டிடிவி தினகரன் மாற்று காரில் சாலை வழியாக பெங்களூரு சென்றவர் அங்கிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றுள்ளார்.

நேற்று ஜனவரி 8ஆம் தேதி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட சிலரை அவர் சந்தித்தார் என்ற தகவல்கள் கிடைக்கின்றன.

அவசரமான சந்திப்புகள் பற்றி விசாரித்தோம்.

“பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா சுதந்திரமாக இருக்க சிறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி கைமாறியதாக சிறப்பு டிஐஜி ரூபா, டிஜிபி மற்றும் உள்துறைக்கு புகார் அனுப்பியிருந்தார். அந்த புகாரை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் வினய் குமார் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது அப்போதிருந்த கர்நாடக அரசு. வினய் குமார் அறிக்கையில் சிறைவிதிமுறைகள் மீறியிருப்பதும் பணம் கைமாறியிருக்க முகாந்திரம் உள்ளது என்றும் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையை வைத்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், சிறைத்துறை முன்னாள் டிஐஜி சத்யநாராயணா ராவ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். (குற்ற எண் 7 /2018)

லஞ்சம் பெற்றதற்கு வழக்கு பதிவு செய்திருந்தாலும், லஞ்சம் கொடுத்தது யார் என்று கண்டுபிடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். குற்றப்ப த்திரிகையில் லஞ்சம் கொடுத்தவர் பெயர் சசிகலா என்று சேர்த்துவிட்டு நீதிமன்றம் மூலமாக சிறைத்துறை அதிகாரியிடம் பிடி வாரன்ட் (தமிழகத்தில் பி.டி வாரன்ட், கர்நாடகத்தில் பாடி வாரன்ட்) கொடுத்துவிட்டால் இந்த வழக்கில் சசிகலாவை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க முடியும். இப்படி ஒரு திட்டம் நடப்பதாக அறிந்துதான் அதை முறியடிப்பதற்காக அவசரமாக டெல்லி விரைந்திருக்கிறார் டிடிவி தினகரன்”என்கிறார்கள் உளவுத்துறை வட்டாரங்களில்.

ஏற்கனவே செப்டம்பர் 20 ஆம் தேதி டிடிவி தினகரன் டெல்லி சென்று வந்தார்.அப்போதே அவர் பாஜக பிரமுகர்களை சந்தித்ததாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் மூன்று மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் டெல்லிக்குப் படையெடுத்திருக்கிறார் தினகரன்.

வணங்காமுடி

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

சனி 9 ஜன 2021