மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் பிரதமர் மோடி நேற்று இரவு தரிசனம் செய்தார்.

மதுரையில் அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 2) கலந்துகொள்கிறார். இதையொட்டி நேற்று இரவு தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சுவாமி அம்மன் தரிசனம் செய்ய வந்தார்.

இரவு 8.30 மணி அளவில் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடியை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் அர்ச்சகர்கள், பூரண கும்ப மரியாதை, நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர். இதையடுத்து கோயிலுக்குள் மீனாட்சி அம்மன் சந்நிதி, சுந்தரேஸ்வரர்

சுவாமி சந்நிதியில் தரிசனம் செய்த மோடி, கோயில் கட்டடக்கலையைப் பார்த்து ரசித்தார்.

கோயிலில் பிரதமருக்குச் சிறப்பு மரியாதைகள் அளிக்கப்பட்டன. மோடியின் வருகையையொட்டி மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யப் பிரதமர் மோடி வேட்டி, சட்டையில் வந்தார்.

சீன அதிபரின் வருகையின்போது மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி வேட்டி, சட்டையுடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு மதுரையில் தங்கிய பிரதமர் இன்று அதிமுக-பாஜக தோ்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

இந்தக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இன்று காலை 11.30 முதல் 12.30 வரை பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் நாகர்கோவிலில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்துக்குப் புறப்பட்டு செல்கிறார்.

மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்காக, சுற்றுச்சாலை பகுதியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்புக்காக மதுரை வந்துள்ள மத்திய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேடையை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா், மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், ஒலிப்பெருக்கி அமைப்பாளர்கள், பந்தல் பணியாளர்கள், பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

-சக்தி பரமசிவன்

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வெள்ளி 2 ஏப் 2021