மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

மாப்பிள்ளை வீட்டில் ரெய்டு: பிரச்சாரத்தில் மோடிக்கு ஸ்டாலின் சவால்!

மாப்பிள்ளை வீட்டில் ரெய்டு: பிரச்சாரத்தில் மோடிக்கு ஸ்டாலின் சவால்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் மற்றும் அவரது நண்பர்களான கார்த்திக் மோகன், பாலா ஆகியோரின் வீடுகள் அலுவலகங்களில் இன்று (ஏப்ரல் 2) காலை முதல் வருமான வரித்துறை ரெய்டு செய்து வருகிறது.

இதுகுறித்து இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

“ நான் சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டு திருச்சிக்கு வந்து இறங்கினேன். திருச்சியில் இருந்து புறப்பட்டு இங்கே ஜெயங்கொண்டம் கூட்டத்துக்காக காரில் வந்துகொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. என் மகள் வீட்டில் ரெய்டு நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் அந்த செய்தி.

என் மகள் செந்தாமரை வீட்டில் 30 வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே புகுந்து,நூறு போலீஸாரின் பாதுகாப்போடு ரெய்டு செய்துகொண்டிருக்கிறார்கள்.

அதிமுக அரசை இன்றைக்கு காப்பாற்றிக் கொண்டிருப்பது பிஜேபி அரசு, மோடி அரசு.ஏற்கனவே அதிமுக அமைச்சர்கள் வீட்டில் முதல்வர் வீட்டில், துணை முதல்வர் வீட்டில், தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்தி அந்த கட்சியை மிரட்டி உருட்டி வச்சிருக்காங்க.

அதனால தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம் பறிச்சிருக்காங்க. ஐடி. சிபிஐ வச்சி எல்லாத்தையும் மிரட்டறாங்க. ஒண்ணு மட்டும் மோடிக்கு சொல்றேன்...இது திமுக மறந்துடாதே...நான் கலைஞரின் மகன். இந்த சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்சி ஒடுங்கிட மாட்டேன். மிசாவையே பார்த்தவன், எமெர்ஜென்சியையே பார்த்தவன் தான் இந்த ஸ்டாலின்.

நீங்க எத்தனை ரெய்டு நடத்தினாலும் நாங்க கிஞ்சிற்றும் கவலைப்பட மாட்டோம். அதாவது தேர்தலுக்கு இன்னும் மூனு நாள் இருக்கு. அதுக்குள்ள இவங்கள மிரட்டி வீட்டுக்குள்ள படுக்க வச்சிடலாம்னு நினைக்கிறாங்க. அது திமுகாரன்கிட்ட நடக்காது. அது அதிமுககாரனிடம் நடக்கும். அவங்க மாநில உரிமைகளை எல்லாம் விட்டுட்டு அவங்க கால்ல விழுந்து கிடக்கலாம். ஆனா நாங்க பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். இதுக்கெல்லாம் மக்கள் ஏப்ரல் 6 ஆம் தேதி பதில் சொல்வார்கள். இன்னும் எவ்வளவு ரெய்டு வேணும்னாலும் நடத்துங்க. திமுக மேலும் மேலும் கிளர்ந்து எழும்”என்று பேசினார் ஸ்டாலின்.

-வேந்தன்

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வெள்ளி 2 ஏப் 2021