மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

சபரீசனை அடுத்து செந்தில்பாலாஜி: ரெய்டு வளையத்தில் திமுக

சபரீசனை அடுத்து செந்தில்பாலாஜி: ரெய்டு வளையத்தில் திமுக

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று தினங்களே இருக்கும் நிலையில் இன்று (ஏப்ரல் 2) காலை முதல் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை, மாப்பிள்ளை சபரீசன் வீட்டில் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறையினர்...அடுத்த அதிரடியாக இன்று பகல் திமுக எம்.எல்.ஏ.வும் கரூர் வேட்பாளருமான செந்தில்பாலாஜி வீட்டிலும் ரெய்டு நடத்திவருகின்றனர்.

திமுகவின் தலைவருடைய மாப்பிள்ளை வீட்டிலேயே ரெய்டு என்ற தகவல் ஒருபக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்... இன்று பகல் மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் டீம் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் இருக்கும் செந்தில்பாலாஜி வீட்டிலும், கரூரில் இருக்கும் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும், மேலும் சில திமுக நிர்வாகிகளின் வீட்டிலும் ரெய்டு நடத்தத் தொடங்கினர்.

செந்தில்பாலாஜியின் வீட்டின் முன் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்குள் சில மணி நேரங்களாக ரெய்டு நடைபெற்று வருகிறது.என்ன கைப்பற்றினார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.

கரூர் திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது,

“செந்தில்பாலாஜி என்றாலே பசையுள்ள மனிதர் என்றுதான் அரசியல் வட்டாரத்தில் அறியப்பட்டிருக்கிறார். இம்முறை கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் தனது ஆதரவாளர்களுக்கே ஸ்டாலினிடம் சொல்லி சீட் பெற்றிருக்கிறார் செந்தில்பாலாஜி. தனது கரூர் தொகுதி, மேலும் அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் என மொத்த மாவட்டத்துக்கும் தேர்தல் செலவினை தானே பார்த்துக் கொள்வதாக செந்தில்பாலாஜி உறுதியளித்ததால்தான் அவர் கூறிய நபர்களுக்கு தலைமை சீட்டும் கொடுத்தது,

அதேபோல கடந்த சில நாட்களாகவே ஒரு நாளைக்கு பத்து முதல்,பனிரெண்டு மணிநேரம் தன் தொகுதியில் நடந்தும் பிற தொகுதி வேட்பாளர்களோடு சென்றும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் செலவை ஏற்றுக் கொள்வதாக செந்தில்பாலாஜி சொல்லியிருந்தாலும் சில நாட்களாகவே போதிய பணத்தைப் புரட்ட முடியாமல் திடீரென சிக்கலில் சிக்கிக் கொண்டார் செந்தில்பாலாஜி. பணத்துக்காக சில ஏற்பாடுகளையும் செய்து வந்தார். இந்த நிலையில்தான் செந்தில்பாலாஜியின் பண ரூட்டை மோப்பம் பிடித்து வருமான வரித்துறையினர் வந்துவிட்டனர் போலும்” என்கிறார்கள்.

செந்தில்பாலாஜியின் சகோதரர், செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவாளர்களான திமுக நிர்வாகிகள் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருவதால் கரூர் மாவட்ட திமுகவுக்கான கடைசி நேர கரன்சி பாசனத்தை தடுக்கும் முயற்சிதான் இந்த ரெய்டு என்கிறார்கள் கரூர் திமுகவினர்.

-வேந்தன்

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வெள்ளி 2 ஏப் 2021