மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

பணப்பட்டுவாடா: சிக்கும் ஆளும் கட்சிக்காரர்கள்!

பணப்பட்டுவாடா:  சிக்கும் ஆளும் கட்சிக்காரர்கள்!

விழுப்புரத்தில் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் ஆரத்தி தட்டில் பெண்களுக்கு பணம் போட்ட புகாரில், அமைச்சர் சி.வி.சண்முகம் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல் துறையினர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், வாக்காளர்களுக்கு எந்த விதத்திலும் பணம் விநியோகம் நடந்திட கூடாது என தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பணப்பட்டுவாடா குறித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், விழுப்புரத்தில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு சி.வி. சண்முகம் பணம் கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காட்பாடி

காட்பாடியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த புகார் தொடர்பாக அதிமுக வேட்பாளர் ராமு உட்பட 9 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில், துரைமுருகனும், அதிமுக சார்பில் வி.ராமுவும் போட்டியிடுகின்றனர்.

காட்பாடி மெட்டுக்குளம் பகுதியில் உள்ள உணவகத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து, தேர்தல் செலவினப் பார்வையாளர் அமித் கரண், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், பறக்கும் படை அலுவலர் நரேஷ் குமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் விடுதியில் நேற்று(ஏப்ரல் 1) சோதனையிட்டனர்.

இன்று காலை வரை நீடித்த சோதனையில் ரூ.18 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு லேப்டாப், 2 செல்போன்கள், 3 மதுபாட்டில்கள், ஏடிஎம் கார்டு, துண்டுப் பிரசுரங்கள், வாக்காளர் பட்டியல், வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட தொகை குறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பேடுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட நோட்டு புத்தகத்தில் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், இதுவரை 569 பேருக்கு ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாகவும், மீதம் ரூ.8,000 இருந்ததாகவும், அதில் உடன் வந்தவர்களுக்கு ரூ.3000 கொடுத்ததாகவும் கணக்குகள் எழுதப்பட்டிருந்தன.

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு உட்பட 9 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுகுறித்து வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்படி, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

வினிதா

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

வெள்ளி 2 ஏப் 2021