Uபுதுச்சேரி: மதியம் 1 மணி நிலவரம்!

politics

புதுச்சேரியில் மதியம் 1 மணி நிலவரப்படி, என் ஆர் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மூன்று பிரிவுகளாக பிரித்து எண்ணப்படுவது வழக்கம். முதலில் 12 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை முடித்து, அவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை ஒப்படைத்துவிடுவார்கள். பின்பு, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 10 தொகுதிகள் எண்ணப்படும். இதையடுத்து, 8 தொகுதிகள் எண்ணப்படும். கடந்த காலம் முதல் தற்போது வரை புதுச்சேரியில் இந்த மாதிரிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தற்போது, முதல் 12 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடியும் நிலையில் உள்ளது புதுச்சேரி மாவட்டத்தில் எட்டு தொகுதிகள், மாஹி, ஏனாம், மற்றும் காரைக்கால் பகுதியில் இரண்டு தொகுதிகள் என முதலில் 12 தொகுதிகள் எண்ணப்பட்டு வருகிறது.

ஏனாம் தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரெங்கசாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளராக கொல்லப்பட்டி சீனிவாசன் போட்டியிட்டார். அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது.

தற்போது 673 வாக்கு வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.

புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.பி. ரமேஷ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது.

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் 5536 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதனை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் முன்னிலை வகித்து வருகிறார்.

உப்பளம் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிபெல் கென்னடி 13,433 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 8,653 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.

இதையடுத்து, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 10 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கை ஆரம்பாகும்.

**அபிமன்யு**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *