மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு?

மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு?

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசின் உயர் வட்டாரங்களில் விசாரித்தபோது தகவல்கள் கிடைத்துள்ளன.

கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால், இந்த ஊரடங்கு விதிகளை மீறி மக்கள் வெளியில் சென்று வந்ததைக் காண முடிகிறது.

தற்போது, தமிழகத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. கொரோனா பரவல் உச்சத்திலிருந்த மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களைக் காட்டிலும் கடந்த இரு நாட்களாகத் தமிழகத்தில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு நாள் பாதிப்பு 35 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. இந்த சூழலில் மே மாத இறுதியில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

கடந்த ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசித்து வந்தார். அப்போது எதிர்க்கட்சியினர் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி ஆலோசிக்க வேண்டும் என்று கூறிய போது, ‘கொரோனா வைரஸ் குறித்து மருத்துவர்களுடன் தான் ஆலோசிக்க முடியும், எதிர்க்கட்சிகளுடன் எப்படி ஆலோசிப்பது’ எனக் கேட்டிருந்தார்.

இந்த மருத்துவர்கள் குழு புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகு, கூடியதாகவோ, அக்குழுவிடம் ஆலோசித்ததாகவோ எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில், கடந்த மே 14ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ஆலோசனையின் அடிப்படையில், 13 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவில், திமுக – மருத்துவர் நா.எழிலன் அதிமுக – மருத்துவர் சி.விஜயபாஸ்கர், காங்கிரஸ் – ஏ.எம்.முனிரத்தினம் பாமக – ஜி.கே.மணி, பாஜக – நயினார் நாகேந்திரன், மதிமுக – தி.சதன் திருமலைக்குமார், விசிக – எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – வி.பி.நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – தி.ராமசந்திரன், மமக – ஜவாஹிருல்லா, கொ.ம.தே.க – ரா.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி – தி.வேல்முருகன் புரட்சி பாரதம் – பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் இடம்பெற்றனர்.

ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாஸ் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வலியுறுத்தி வரும் நிலையில், இந்த குழுவுடன் நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்து விசாரித்ததில், “மே 30,31 என மாத இறுதியில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்திருக்கின்றனர். எனவே மே 31ஆம் தேதி வரை உறுதியாக ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்” எனச் சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

வெள்ளி 21 மே 2021