மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

ஒற்றைத் தலைமையா? டெல்லியில் நழுவிய எடப்பாடி

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று (ஜூலை 26) பிரதமர் மோடியை டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர்.

அதன் பின் இன்று பிற்பகல் செய்தியாளர்களை இருவரும் கூட்டாக சந்தித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமிதான் செய்தியாளர்களிடம் பேசினார்.

“கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தமைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தோம். மேலும் தமிழகத்துக்கு அதிக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்றும், கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் டெல்டா பாலைவனம் ஆகிவிடும் என்றும் எடுத்துக் கூறினோம். காவிரி கோதாவரி இணைப்பை பற்றி பேசினோம். இவ்வாறு தமிழகத்தின் பிரச்சினைகள் பற்றித்தான் பேசினோம்” என்று எடப்பாடி பழனிசாமி விளக்க,

“அதிமுக கட்சிப் பிரச்சினை ஒற்றைத் தலைமை பற்றி பேசினீர்களா?”என்ற கேள்விக்கு வணக்கம் என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டுவிட்டனர் இருவரும்.

ஏற்கனவே பிரதமரை சந்தித்தபோது வெளியே வந்து கட்சி விவகாரங்கள் பற்றி வெளிப்படையாக பேசிய எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி விவகாரங்களை வெளிப்படையாக பேசவில்லை. மேலும் அடுத்து அமித் ஷாவையும் சந்திக்க இருப்பதாக தெரிகிறது.

பிரதமரை சந்தித்தபோது முன்னாள் அமைச்சர் வேலுமணி, தம்பிதுரை, ரவீந்திரநாத், நவநீதகிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்

-வேந்தன்

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

திங்கள் 26 ஜூலை 2021