மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு செப்டம்பர் 27 ஆம் தேதி நிலவரப்படி 1657 ஆக உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்படுவதை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதற்காக ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திலும் தடுப்பூசி முகாம் களை தீவிரமாக நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்தல் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது அரசு.

இந்த வகையில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதை விஞ்சி 24 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 26ஆம் தேதி நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் வெற்றி பெற்றமைக்குப் பாராட்டுக்களை தெரிவித்துள்ள தலைமைச் செயலாளர் இறையன்பு, அந்தக் கடிதத்துடன் தமிழ்நாட்டின் ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திலும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் தீவிரத்தை அடிப்படையாக வைத்து ரேங்க் அளித்து தரவரிசைப் பட்டியல் படுத்தியுள்ளார்.

அதாவது excellent (அருமையான செயல்பாடு , very good(மிகச் சிறப்பு), good (சிறப்பு) , need improvement(கவனம் தேவை), poor performance (மோசமான செயல்பாடு) என சுகாதார மாவட்டங்களை வகைப்படுத்தியுள்ளார் தலைமைச் செயலாளர்.

இந்த வகையில் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களாக கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை எக்ஸலண்ட் என்ற நிலையில் வைத்துள்ளார் தலைமைச் செயலாளர்.

வெளிப்படையாக இது தலைமைச் செயலாளரின் தரவரிசைப்பட்டியலாக இருந்தாலும் இந்தப் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆலோசனை பெறப்பட்டுமுதல்வரின் ஒப்புதலுடனே வெளியிட்டுள்ளார் தலைமைச் செயலாளர் என்கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள். அதன்படி பார்த்தால் தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இந்தப் பட்டியல் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

ஏனென்றால் தத்தமது மாவட்டங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படுவது பற்றி கண்காணிக்குமாறு ஏற்கனவே அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் ஒவ்வொரு அமைச்சரும் தனது மாவட்டத்திற்குட்பட்ட சுகாதார மாவட்டங்களில் தடுப்பூசிகள் போடும் இயக்கத்தை தீவிரப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதன்படி பார்த்தால் தலைமைச் செயலாளர் வெளியிட்ட பட்டியல் மறைமுகமாக அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கு அளித்த தரவரிசைப் பட்டியலாகவும் அமைந்து இருக்கிறது என்கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள். இந்த வகையில் மொத்தமுள்ள 45 சுகாதார மாவட்டங்களில் 33வது இடத்திலிருந்து 45 ஆவது இடம் வரை வகிக்கும் மாவட்டங்களை புவர் பர்பாமன்ஸ் என்று தனது கமெண்ட் ஆக குறிப்பிட்டுள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு

அந்த (சுகாதார) மாவட்டங்கள் எவையென்றால் சிவகாசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரியலூர், வேலூர், இராமநாதபுரம், விழுப்புரம் ஆகியவை.

முதல்வர் ஒப்புதல் அளித்த தலைமைச் செயலாளரின் இந்த தரவரிசைப் படி பார்த்தால் சிவகாசி (விருதுநகர்) மாவட்ட அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்,ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு,- திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அமைச்சர்களான துரைமுருகன், காந்தி,- கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட அமைச்சர் பொன்முடி,- கடலூர் மாவட்ட அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,கணேசன், - திருவண்ணாமலை மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு, - புதுக்கோட்டை,அறந்தாங்கி மாவட்ட அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன்,- ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் ராஜ கண்ணப்பன்,- செங்கல்பட்டு மாவட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன்,- அரியலூர் மாவட்ட அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோரது மாவட்டங்கள், தடுப்பூசி செலுத்துதலில் ‘மிகவும் மோசமான செயல்பாடு கொண்டதாக முதல்வரின் ஒப்புதலுடன் தலைமைச் செயலாளரால் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் சிவகாசி(விருதுநகர்), புதுக்கோட்டை, வேலூர், கடலூர் போன்றவை இரட்டை அமைச்சர்கள் கொண்ட மாவட்டங்கள். இந்த மாவட்டங்களின் நிலைமைக்கு அந்த இரு அமைச்சர்களுமே பொறுப்பாகிறார்கள். அவர்களில் ஒரு அமைச்சர் நன்றாக செயல்பட்டிருந்தாலும் தரவரிசைக்கு இருவருமே பொறுப்பேற்க வேண்டியுள்ளது.

இதை நான்கு மாத காலத்தில் அமைச்சர்களுக்கு முதல்வர் அளித்த ப்ராக்ரஸ் ரிப்போர்ட் ஆகவே பார்க்க வேண்டியுள்ளது.

-வேந்தன்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

செவ்வாய் 28 செப் 2021