rமுல்லை பெரியாறு: கேரள முதல்வர் எச்சரிக்கை!

politics

தமிழகத்தின் தென்மாவட்ட விவசாயத்திற்கு முல்லைப்பெரியாறு அணை இன்றியமையாதது. பயன்பெறுவது தமிழகம் என்றாலும் அணைக்கட்டு இருப்பது கேரள மாநிலத்திற்குள். இந்த அணையின் அதிக பட்ச உயரம் 155 அடி. அதிகபட்ச கொள்ளளவு 15.5 டி.எம்.சி. ஆகும்.

அணையின் பாதுகாப்பு கருதி142 அடிவரை மட்டுமே நீர் தேக்கம் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு கட்சி வித்தியாசமின்றி கேரள மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பெரியாறுஅணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நீதிமன்றம் மூலம் சட்டப்போராட்டம் மேற்கொண்டு வருகிறது.

125 ஆண்டுகள் பழமையான அணை என்பதால், 152 அடி வரை நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும். கேரளா இரண்டாக பிளந்துவிடும் என்பதுகேரள அரசின் நிலைப்பாடு. கேரளாவில் பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு உயர்ந்தது.

இதனால் அணையின் நீர்மட்டத்தை குறைக்க ஆண்டிபட்டியில் உள்ளவைகை அணைக்கு நீரை திறந்துவிட கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணையை கைவிட வேண்டும் என மலையாள நடிகர்கள்சமூக வலைதளங்களில்கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். Decommission Mullaperiyar Dam என்ற ஹேஷ்டேக்கில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் நடிகர் பிருத்விராஜ் #DecommisionMullaperiyarDam என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை பொருட்படுத்தாமல் 125 வருட அணை ஒரு செயல்பாட்டு கட்டமைப்பாக இருக்க காரணமோ மன்னிப்போ இல்லை நாம் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை ஒருபுறம் வைத்து எது சரியானதோ அதைச் செய்யும் நேரம் வந்துவிட்டது. சிஸ்டத்தை மட்டுமே நம்ப முடியும், சிஸ்டம் சரியான முடிவை எடுக்க பிரார்த்திப்போம்! என்று கூறியுள்ளார்.பிரித்விராஜின் இந்த கருத்துக்கும் மலையாள நடிகர்களின் கருத்துக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். அதிலும் தன்னை ஒரு மலையாளியாக முன்னிறுத்திக்கொள்வதில் தீவிரமானவரான பிருத்திவிராஜ் கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளது.

அதுபோன்று, முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும், புதிய முல்லைப்பெரியாறு அணையை கட்ட வேண்டும் என்று கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவின.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று தேனியில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நடிகர் பிரித்விராஜ், கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ரசூல் ஜோய் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தேனி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

இந்நிலையில், கேரள சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் பினராயி விஜயன், “முல்லை பெரியாறு அணை குறித்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உண்மையல்ல. கேரளாவில் மழை தொடர்ந்தால், நிலையான கட்டமைப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது போல் பதிவு செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முல்லைப் பெரியாறு அணைக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என்று கூறினார்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *