மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 அக் 2021

மாணவர் அருண்குமாரின் கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர்!

மாணவர் அருண்குமாரின் கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர்!

அரசு பள்ளியில் பயின்று ஹைதராபாத் ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற மாணவர் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகன், பூவாத்தாள் என்ற தம்பதியரின் மகன் அருண்குமார். இவர் அங்குள்ள செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.

இதையடுத்து, இந்தாண்டு ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி-ஹைதராபாத்) பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று, 17,061-வது இடமும் ஜேஇஇ மெயின் தேர்விலும் தேர்ச்சி பெற்று 12,175 வது இடத்தையும் பிடித்துள்ளார். அதை முன்னிட்டு மாணவர் அருண்குமாரை இன்று(அக்டோபர் 28) நேரில் வரவழைத்து முதலமைச்சர் பாராட்டினார்.

எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப் பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவரைப் பாராட்டிய முதலமைச்சர், அவரது மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என உறுதியளித்துள்ளார்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் திறமையானவர்கள்தான்.. அவர்களும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறக் கூடிய அளவிற்கு அரசு பள்ளிகளில் தரமான வகையில் பாடம் கற்பிக்கப்படுகிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,” அரசு பள்ளிதானே என்று தாழ்வாக எண்ணிவிடக்கூடாது, அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன் வரவேண்டும். அரசு பள்ளி என்பது பெருமையின் அடையாளம் எனும் வகையில் மாற்றிக் காட்ட உழைத்து வருகிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வியாழன் 28 அக் 2021