மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 அக் 2021

இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழு!

இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழு!

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமையில் இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவையில் இலங்கை தமிழர்களின் நலன் காக்கும் பல்வேறு முக்கிய திட்டங்களையும், சலுகைகளையும் வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல; அவர்களுக்கு உறுதுணையாக எப்போதும் நாம் இருக்கிறோம். அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதன் அடையாளமாக இனி, இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாம் என்று அழைக்கப்படாமல், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என்று முதல்வர் ஆணை பிறப்பித்தார்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்டோபர் 28) உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் சட்ட வல்லுநர் மனுராஜ் சண்முகசுந்தரம், மூத்த பத்திரிகையாளர் கோவி லெனின் உள்ளிட்ட 20 பேர் உள்ளனர்.

இக்குழுவானது இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம்களின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, இலங்கை தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான கல்வி, சமூக பாதுகாப்பு பலன்கள், குறைகளை களைவது, திறன் மேம்பட்டு வளர்ச்சி திட்டம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றிற்கு வழிவகை செய்யும்.

மேலும் குடியுரிமை பொறுத்தவரை இலங்கைக்கு செல்ல விருப்பப்பட்டால் அவர்களுக்கான தீர்வுகள் சட்டபூர்வமாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கும் இந்த குழு வழிவகைகளை செய்யும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வியாழன் 28 அக் 2021