மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 டிச 2021

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் பாதிப்பு!

இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் பாதிப்பு!

கர்நாடகாவைத் தொடர்ந்து குஜராத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. ஒன்றிய அரசும் அவ்வப்போது இதுகுறித்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஜிம்பாப்வே நாட்டிலிருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த 72 வயதானவருக்கு ஜிம்பாப்வேயிலிருந்து திரும்பி வந்தவுடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது மாதிரி மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்றைக்கு அதன் முடிவு வெளியான நிலையில், அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து குஜராத் சுகாதாரத் துறை,“ ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். அவர் வசிக்கும் இடம் மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்களிடம் பரிசோதனை நடத்தி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு கடிதம்

இதற்கிடையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் ஒடிசா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் மிசோரம், ஜம்மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ஒவ்வொரு மாநிலத்தின் கொரோனா நிலவரத்தை குறிப்பிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில் தமிழ்நாடு மாநிலத்தைக் குறிப்பிட்டு நவம்பர் மூன்றாம் வாரத்திற்கு பிறகு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா பரவுதலை குறைக்கவும், உயிரிழப்பை தடுக்கவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். ஆபத்தான நாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை விமான நிலையங்களிலேயே பரிசோதனை செய்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதிகநோய் பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களில் கண்டறியக் கூடிய தொற்றுகளின் மாதிரிகளை உடனடியாக மரபணு பகுப்பாய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி

இந்நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” ஒன்றிய அரசு மற்றும் ஐசிஎம்ஆர் வழங்கிய அறிவுறுத்தலின்படிதான் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. அந்த வழிகாட்டுதலின்படிதான் தடுப்பூசி டோஸ்களுக்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தக் கோரி கோரிக்கைகள் வருகின்றன. ஆனால், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. பூஸ்டர் தடுப்பூசி குறித்து ஒன்றிய அரசிடம் இருந்து அறிவிப்பு வந்தால், முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு அரசு அதனை செயல்படுத்தும்” என்று கூறினார்.

-வினிதா

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

சனி 4 டிச 2021