Yஇந்தியாவில் 5 பேருக்கு ஒமிக்ரான்!

politics

இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவ தொடங்கியுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது வரை இந்தியா உட்பட 38க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் பரவத் தொடங்கியதும் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. எனினும் இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

நேற்றுவரை கர்நாடகாவில் இரண்டு பேருக்கும், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில் இன்று டெல்லியில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தான்சானியாவில் இருந்து டெல்லி வந்தவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், வெளிநாடுகளிலிருந்து டெல்லி வந்த 17 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இவர்களுக்கு, ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்று கண்டறிய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

**மதுரை**

சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மட்டுமின்றி உள்நாட்டுப் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஓமிக்ரான் வைரசைக் கண்டு பொதுமக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை என்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *