மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 டிச 2021

தொழில்முனைவோரை மீட்க மனை விலை குறைப்பு!

தொழில்முனைவோரை மீட்க மனை விலை குறைப்பு!

கொரோனாவால் ஏற்பட்ட தொழில்முடக்க நிலையில் இருந்து தொழில்முனைவோர் மீள வழிவகை செய்யும் வகையில் தமிழ்நாடு சிட்கோ தொழில்மனைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டினை தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகளை ஊக்குவிக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் சிட்கோ தொழில்மனைகளின் விலையை குறைத்து இன்று(டிசம்பர் 7) பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில்,” ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஏக்கர் ஒன்றிற்கு ரூ.1,19,79,000லிருந்து 75% குறைத்து ரூ.30,81,200 ஆகவும், கும்பகோணத்தில் ரூ.3,04,92,000 73% குறைத்து ரூ.81,89,300 ஆகவும் நாகப்பட்டினத்தில் ரூ.2,39,71,500 லிருந்து சுமார் 55% குறைத்து ரூ. 85,35,800 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய மனைமதிப்பிலிருந்து ஏக்கர் ஒன்றிற்கு கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சியில் ரூ.9.0 கோடியிலிருந்து 4.8 கோடி குறைத்து ரூ.4.2 கோடியாகவும், திருப்பத்தூர் மாவட்டம், விண்ணமங்கலத்தில் ரூ.4.8 கோடியிலிருந்து ரூ.2.8 கோடி குறைத்து ரூ.2 கோடியாகவும், செங்கல்பட்டு மாவட்டம், ஆலத்தூரில் ரூ.6 கோடியிலிருந்து ரூ.2.5 கோடி குறைத்து ரூ.3.5 கோடியாகவும் மற்றும் ஈரோடு தொழிற்பேட்டையில் ரூ.6.4 கோடியிலிருந்து ரூ.2.6 கோடி குறைத்து ரூ.3.8 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி, பிடாநேரி, இராஜபாளையம் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 30% முதல் 54% வரையிலும் மற்றும் விருதுநகர், அரக்கோணம், பர்கூர் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 40%-50% வரை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 12 தொழிற்பேட்டைகளுக்கு 2016-2017 ஆம் ஆண்டில் இருந்த மனைமதிப்பே நடப்பாண்டிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 7 டிச 2021