மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 டிச 2021

எம்.பி.களை எச்சரித்த மோடி

எம்.பி.களை எச்சரித்த மோடி

பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி இன்று(டிசம்பர் 7) எச்சரித்துள்ளார்.

டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பாஜக தேசிய தலைவர் நட்டாவும் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தயவுசெய்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் மற்றும் கட்சிக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். இதைப்பற்றி நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். உங்களுக்கு ஒவ்வொருமுறையும் குழந்தைகளுக்கு சொல்வது போல் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அது நல்லதும் அல்ல. எம்.பி.க்கள் உங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் சரியான நேரத்தில் மாற்றங்கள் ஏற்படும்” என்று எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் பாஜக அரசு பல்வேறு பிரச்சினைகளை இரு அவைகளிலும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக 700 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் மற்றும் போராட்டம் என பல்வேறு நெருக்கடிகளை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொடுத்து வருகின்றனர். இதனுடன் தற்போது நாகாலாந்தில் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரமும் சேர்ந்துவிட்டது. அதோடு அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சரிவர அவைக்கு வராமல் அல்லது ஆப்சென்ட் ஆவதால் எம்.பி.களை பிரதமர் எச்சரித்துள்ளார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 7 டிச 2021