மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 டிச 2021

கஞ்சா, லாட்டரி ஒழிப்பு வேட்டையில் தமிழக போலீஸ்!

கஞ்சா, லாட்டரி ஒழிப்பு வேட்டையில் தமிழக போலீஸ்!

தமிழகத்தில் பெரும்பாலான குற்றங்கள் நடைபெறுவதற்கு கஞ்சா போன்ற பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதுதான் காரணம். அதுபோன்று தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சட்ட விரோதமாக விற்பதன் மூலம், அதை வாங்கி ஏமாறும் அப்பாவி மக்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்த நிலையில், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனைத்து மாநகரக் காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், ‘பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க, 06.01.2022 வரை ஒரு மாத காலம் கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு வேட்டை நடத்த வேண்டும்.

கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு, கைது செய்து சிறையில் அடைப்பது, தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் - பதுக்கல் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்தக் கொள்முதல் விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கஞ்சா குட்கா, லாட்டரி பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு மனநல ஆலோசகர் மூலம் அவர்களை இப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, ரகசியத் தகவல் சேகரித்து விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் பயிரிடப்படும் கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திர போலீஸாருடன் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதைத் தடுப்புப் பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும்.

ரயில்வே காவல் துறையினர் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா, லாட்டரி கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

இந்த ஒரு மாதத்துடன் இந்த நடவடிக்கை நின்று விடாமல் காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர்களுக்கு கஞ்சா, குட்கா, லாட்டரி குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பொறுப்பை அளித்து, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பணியினை சென்னை காவல் ஆணையர், கூடுதல் காவல் இயக்குநர், சட்டம் - ஒழுங்கு ஆகியோர் தினமும் கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

புதன் 8 டிச 2021