மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 ஜன 2022

முழு ஊரடங்கு: தமிழகத்தில் பாதிப்பு குறைந்ததா?

முழு ஊரடங்கு: தமிழகத்தில் பாதிப்பு குறைந்ததா?

முழு ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேசமயத்தில், நேற்று ஒரே நாளில் 23,975 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதேசமயத்தில் கடந்த இரு ஞாயிற்றுக் கிழமையும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் தொற்று பரவல் வேகம் மிகுதியாகக் குறைந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா சிகிச்சைக்காகத் தமிழகம் முழுவதும் 1,91,902 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகரித்தபோதிலும், மருத்துவமனைகளில் இதுவரை 8,912 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பைத் தவிர்க்கத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இறப்பின் விளிம்புக்குச் செல்லத் தேவையில்லை. ஒமிக்ரான் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். இதை மக்கள் உணர வேண்டும். வரும் ஜனவரி 22ஆம் தேதி 19ஆவது தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் தொற்றுப் பரவல் வேகம் மிகுதியாகக் குறைந்துள்ளது. பொதுமக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

முதற்கட்டமாகக் கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு முந்தைய நாள் 8ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 11 ஆயிரமாக இருந்தது. ஆனால் இரு வார ஊரடங்கிற்குப் பிறகு நேற்றைய நிலவரப்படி ஒரு நாள் பாதிப்பு 23,975 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

திங்கள் 17 ஜன 2022