மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 ஜன 2022

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: மோடி புகழாரம்!

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: மோடி புகழாரம்!

எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 105ஆவது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதுபோன்று பல்வேறு அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும், எம்ஜிஆரின் ரசிகர்களும் அவரது புகைப்படத்தைப் பகிர்ந்தும், அவர் கொண்டு வந்த திட்டங்களைச் சொல்லியும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்து தமிழில் பதிவிட்டுள்ளார்.

அதில், "பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!" என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

திங்கள் 17 ஜன 2022