மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 ஜன 2022

ஒப்பந்ததாரர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட விதிமுறை: பொதுப்பணித்துறை அறிவிப்பு!

ஒப்பந்ததாரர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட விதிமுறை: பொதுப்பணித்துறை அறிவிப்பு!

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் பதிவுகளுக்கான பண வரம்பு 2021ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி திருத்தியமைக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறையைத் தலைமைப் பொறியாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து, அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமெனச் சென்னை பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒப்பந்ததாரரின் பதிவு அமைப்பானது அனைத்து அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விரிவாக இருத்தல் வேண்டும். பதிவு செய்ய மற்றும் புதுப்பிக்க வழங்கப்பட ஆவணங்களின் உண்மைத்தன்மை, அனைத்து வகையான தேவைகளையும் மிக கவனமாகச் சரிபார்க்க வேண்டும்.

புதுப்பித்தல், மறுசீரமைப்புகளுக்கு முந்தைய அனுபவம், மற்ற நிதிநிலை, கடன் தீர்க்கும் திறன் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு தற்போது உள்ள ஒப்பந்ததாரர்களுக்குப் பண வரம்பு நிர்ணயிக்கப்படலாம்.

ஒப்பந்ததாரர்களின் வகுப்புகள் மறுவகைப்படுத்தப்பட்டதன் காரணமாக, விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணங்களைச் செலுத்துவதன் மூலம், ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தரம்/புதுப்பித்தல் போன்றவற்றிற்காகப் பரிசீலிக்கப்படுவார்கள்.

ஏற்கெனவே நீர்வளத்துறை, தலைமைப் பொறியாளர் அலுவலகங்களில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள், ஏப்ரல் ஒன்றாம் தேதிமுதல் பொதுப்பணித்துறை டெண்டர்களில் பங்கேற்க பொதுப்பணித்துறையிலும் பதிவு செய்வது அவசியம்.

1 முதல் 5 வரை அனைத்து வகுப்பு ஒப்பந்ததாரர்களும் அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்த பிறகே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கீழ் வகுப்பு பணிகளையும் மேற்கொள்ளத் தகுதியானவர்கள்.

ஒப்பந்ததாரர்கள் வருவாய் அதிகாரிகளிடம் இருந்து நிதி நிலைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து வகை ஒப்பந்ததாரர்களும் சமீபத்திய வருமான வரி மதிப்பீட்டு ஆணையைப் பின்பற்ற வேண்டும்.

அனைத்து வகை ஒப்பந்ததாரர்களும் தகுதி வாய்ந்த அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட ஜிஎஸ்டி எண் மற்றும் ஜிஎஸ்டி சான்றிதழை வழங்க வேண்டும்” என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

-பிரியா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

சனி 22 ஜன 2022