மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 மே 2022

வீட்டு வசதி வாரிய வீடுகள்: பூச்சி முருகன் ஆய்வு!

வீட்டு வசதி வாரிய வீடுகள்: பூச்சி முருகன் ஆய்வு!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின்

சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக

452.94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1891 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மே 17 காலை வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் அதிகாரிகளுடன் திடீரென அந்த குடியிருப்புகளில் ஆய்வு செய்தார்.

வீட்டு வசதி வாரிய திட்டங்களில் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தரம் பற்றி அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த பூச்சி முருகன், "வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் நமது ஆட்சியின் அடையாளமாக இருப்பவை. நமது ஆட்சி காலத்தில் கட்டப்படும் கட்டிடங்கள் தரமானதாக இருக்க வேண்டும். பொருட்களின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது" என்று அழுத்தமாக வலியுறுத்தினார்.

கட்டுமான பொருட்களை பொறுத்தவரை ஒப்பந்த புள்ளிகளில் இடம்பெறும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் பொருட்களின் தரத்தை பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகே பணிகளில் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்குள் சென்று ஒவ்வொரு அறையாக ஆய்வு செய்தார் பூச்சி முருகன். கதவுகள், மின்சார ஸ்விட்ச்சுகள், கழிவறைகளில் பொருத்தப்பட்டுள்ள பொருட்கள் என ஒன்று விடாமல் ஆய்வு செய்தார்.

குடியிருப்புகள் பயன்பாட்டுக்கு வருவதில் ஏற்படும் காலதாமதம் பற்றி ஆலோசனை நடத்தியவர்... பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

வேந்தன்

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

செவ்வாய் 17 மே 2022