மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

பன்னீர், எடப்பாடி எங்கள் பிள்ளைகள் தான்: சசிகலா

பன்னீர், எடப்பாடி எங்கள் பிள்ளைகள் தான்: சசிகலா

அதிமுகவைச் சேர்ந்த சசிகலா நேற்று மே 17ஆம் தேதி தஞ்சாவூர் அருகே விளார் பகுதியில் தனது கணவர் நடராஜன் முன்முயற்சியால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு சென்றார்.

2009 ஆம் ஆண்டு ஈழத்துப் போரில் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்கள் நினைவாக தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வீரவணக்கம் செலுத்தினார். அப்போது அவருடன் பழ நெடுமாறன் இருந்தார்.

தஞ்சாவூரில் இருந்து சிவகங்கை நோக்கிப் பயணம் புறப்பட்ட சசிகலா அங்கேயே வேலுநாச்சியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். சிவகங்கை அரண்மனைக்குள் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

அதன்பிறகு சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா,

"திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் அவர்கள் மத்திய அரசை குறை கூறிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அடுத்த தேர்தல் வரைக்கும் இப்படித்தான் சொல்லிக் கொண்டு இருப்பார்களா? அதை விட்டுவிட்டு தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

சொல்வதை எல்லாம் நல்லாத்தான் சொல்கிறார்கள். ஆனால் செய்கை இல்லை. அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். வாக்குறுதியில் இதுதொடர்பாக சொல்லிவிட்டு தற்போது கண்டும் காணாமல் இருப்பது எப்படி? தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்" என்று வலியுறுத்தினார் சசிகலா.

மேலும் அதிமுகவின் தற்போதைய நிலை பற்றி கேட்டபோது,

"எத்தனை குரூப்பாக பிரிந்திருந்தாலும் அதிமுகவில் எல்லாருமே எங்கள் பிள்ளைகள் தான். என்னுடைய முயற்சி ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கி அம்மாவின் ஆட்சியை மீண்டும் தர வேண்டும். அதை மக்கள் ஆட்சியாக நடத்த வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு சேவல், புறா என கழகம் இரண்டு பட்டது. அதை ஒன்றுபடுத்தும் முயற்சியை நான் எடுத்துச் செய்து வெற்றி பெற்றேன். அந்த தைரியம் இப்போதும் எனக்கு இருக்கிறது. அதைப் போல இப்போதும் செய்வேன்" என்று கூறினார் சசிகலா.

வேந்தன், பிரியா

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

புதன் 18 மே 2022