மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி.யின் நெருங்கிய கூட்டாளியும் அவரது ஆடிட்டருமான பாஸ்கரராமனை சிபிஐ இன்று (மே 18) காலை கைது செய்துள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது பஞ்சாபில் ஒரு மின்சார நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக 260 பணியாளர்களுக்கு சட்டவிரோதமாக கார்த்தி சிதம்பரம் பரிந்துரையின் பேரில் விசா வழங்கப்பட்டதாக கடந்த 14ஆம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஏ1ஆக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று இந்த வழக்கின் அடிப்படையில் டெல்லி, மும்பை, சென்னை, ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் சிதம்பரம், கார்த்தி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை செய்தது.

நேற்று காலை முதல் பிற்பகல் வரை ரெய்டு நீடித்த நிலையில் அதன் பிறகு... இந்த வழக்கில் ஏ1 ஆக குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கர ராமனை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

நேற்று இரவு நடந்த விசாரணையின் முடிவில் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிபிஐ வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் மாநிலம் மான்சாவை

தளமாகக் கொண்ட தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம், தங்கள் நிறுவனத்தை சீன நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்தது. இந்த வகையில் ப்ராஜெக்ட் முடிப்பதற்காக 260 சீனப் பணியாளர்களை வரவழைக்க முடிவு செய்தது. அவர்களுக்கு விசா பெற இடைத்தரகரின் உதவியை நாடியுள்ளது.

இதற்காக அந்த தனியார் நிறுவனத்தின் பிரதிநிதி சென்னையில் உள்ள ஒருவரை தனது நெருங்கிய கூட்டாளி மூலம் அணுகியுள்ளார். விசா பெறுதல், விசா நீட்டித்தல் ஆகியவற்றில் இருக்கும் சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த தனியார் ஒருவரிடம்... ரூ. 50 லட்சம் லஞ்சத்தை மான்சாவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகத்தான் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

வேந்தன்

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

புதன் 18 மே 2022