மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் நிரபராதிகள் அல்ல: கே.எஸ்.அழகிரி

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் நிரபராதிகள் அல்ல:  கே.எஸ்.அழகிரி

31 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று தற்போது ஜாமினில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்பைத் தெரிவித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி போராட்டம் அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 2014ல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எழுவரை விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுவித்தது.

ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த வழக்கின் தீர்ப்புக்குப் பல தரப்பினரும் வரவேற்புத் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் இந்த தீர்ப்புக்கு காங்கிரஸின் பதில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் போராட்டம் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பில், “முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களைக் கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்ச நீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.

கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை ? அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா ? ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா ? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.

நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை (19.5.2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்குக் காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்குக் கொலை செய்வது ஒரு தீர்வாகாது' என்று எழுதிய பதாகையைக் கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

-பிரியா

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

புதன் 18 மே 2022