மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

அணு ஆயுத சோதனைக்குத் தயாரான வட கொரியா!

அணு ஆயுத சோதனைக்குத் தயாரான வட கொரியா!

‘அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும்’ என்று வட கொரிய அரசு எச்சரிக்கை விடுத்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், ‘கொரிய கடல் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள போர்க் கப்பலில், அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் விமானம் உள்ளது’ என்று அமெரிக்கா பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தத் தயாராகிக் கொண்டிருப்பதாக ‘நார்த்’ என்ற அமைப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் இருக்கும் ‘38 நார்த்’ என்ற அமைப்பு, ‘வட கொரியாவைச் செயற்கைக்கோள் மூலம் புகைப்படம் எடுத்ததில் அந்த நாடு அணு ஆயுத சோதனைக்கு ஆயத்தமாகி வருவது போல் தெரிகிறது’ என்று கூறியுள்ளது. இந்த முறை வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தினால், 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாடு நடத்தும் ஆறாவது அணு ஆயுத சோதனையாக இது அமையும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017