மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

சீமைக்கருவேல மரங்கள் இல்லாத கிராமம்!

சீமைக்கருவேல மரங்கள் இல்லாத கிராமம்!

தமிழகத்திலேயே சீமைக்கருவேல மரங்கள் இல்லாத கிராமமாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வடவானூர் கிராமம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீமைக்கருவேலம் என்ற நச்சு மரம் இந்தியாவில் உள்ள வளமான பகுதிகளை அழித்து வருகிறது. அதாவது சீமைக்கருவேல மரம் நிலத்தடி நீரையும், காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சி, விவசாயத்தையும் சுற்றுசூழலையும் பாதிக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரத்தை முழுவதும் அகற்ற வேண்டும் என மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதையடுத்து பல விநோத முறைகளில் கருவேல மரங்களை அகற்றும் பணியில் பொதுமக்கள், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சிறிய செடியாக வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரத்தை வேருடன் பிடுங்கி கொண்டுவந்து ஒப்படைப்பவர்களுக்குச் செடி ஒன்றுக்கு ‘தலா இரண்டு ரூபாய்’ வழங்கப்படும் என்றும், ஜாமீனில் வருபவர்கள் 100 சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நிதி சேர்ப்பதற்கு தொடங்கப்பட்ட சேமிப்புக் கணக்கு என்றும் பல முயற்சிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017