மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 38)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 38)

மட்டையாகிக் கிடந்த விதேஷ் லேசாக குறட்டைவிட ஆரம்பித்ததும் சாந்தவி விழித்துக்கொண்டாள். எழுந்து விதேஷை நகர்த்திப் படுக்க வைத்தாள். சாந்தவிக்கும் பசித்தது. வெளியேறி, திறக்கப்படாமல் இருந்த பார்சலில் ஒன்றைப் பிரித்து அவசரமாக விழுங்கினாள். ருசி ஏதும் தேவைப்படவில்லை. வயிற்றில் ஏதேனும் விழுந்தால்போதும் என்ற நிலைமை.

சாப்பிட்டு முடித்துவிட்டு, விதேஷ் அறையிலேயே படுத்து உறங்கிவிட்டாள்.

அதிகாலைச் சூரியன் சோம்பல் முறிக்கையில் விதேஷ் புரண்டு படுத்தான். புரளும்போது தெரிந்த சொகுசுக்குறைவால் லேசாக விழிப்பு வந்தது. தான் எங்கேயிருக்கிறோம் என்ற குழப்பத்தால் முழுமையான விழிப்பு வந்தேவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவை மீட்டெடுத்தான். கேரளக்கோலம் போல முழுமையாக நினைவுகள் மலர்ந்ததும், விருட்டென எழுந்து சாந்தவியை தேடினான். வாய் கசப்பு அதிகமாக இருந்தது.

நல்ல மது அருந்தியிருந்ததால் தலைவலி இல்லை. இருந்தாலும் தலைவலி இருக்கிறதா என்று கண்களை மூடி வலியைத் தேடினான். வலி இல்லை, வெறும் அசதி மட்டுமே மிச்சமிருந்தது. இன்னும் குறைந்தது மூன்று மணி நேரமாவது தூங்க வேண்டும்.

சாந்தவியை தேடிக்கொண்டு தன் அறைக்குச் சென்றான். கதவு திறந்துதான் இருந்தது. பெரிய போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்தாள் சாந்தவி. கதவைச் சாத்திக்கொண்டு, சாந்தவியின் பக்கத்தில் படுத்து கட்டிக்கொண்டான். சாந்தவி இதை எதி்ர்பார்த்து தூங்கியிருந்ததாலோ என்னவோ சலனமும் இல்லாமல், தூக்கமும் கலையாமல் தூங்கிக்கொண்டு இருந்தாள்.

விதேஷுக்கு ஆச்சர்யமாக இருந்தது. வேறு ஏதேனும் திருடனோ, வழிப்போக்கனோ வீடு புகுந்து இப்படி கட்டிப்பிடித்துக் கிடந்தால், அப்போதும் இப்படித்தான் சலனமே இல்லாமல் படுத்துக் கிடப்பாளோ ?

விதேஷ் பல பெண்களுடன் பழகியிருக்கிறான். எல்லோருமே இப்படித்தான். தூக்கம் என்று வந்துவிட்டால் இடி விழுந்தாலும், சுனாமியே சுருட்டி எடுத்தாலும் தெரியாததுபோல தூங்குகிறார்கள். ஆனால், விடிய விடிய பல ஃபேக் ஐ.டி-க்களுடன் சாட் செய்யும் குத்துவிளக்குகளும் இருக்கிறார்களே என்று குழம்பிக்கொண்டான். ஒரு சில ஐ.டி-க்களில் இயங்கும் பெண்கள் தூங்குவார்களா என்றே குழப்பமாக இருக்கும்.

விதேஷ் இப்போது சாந்தவியை இறுக்கி கட்டிப்பிடித்தான். இப்போதும் சாந்தவி எழுந்திருக்கவில்லை. இது விளையாட்டு என்று விதேஷ் நினைத்தான். என்னதான் போதை என்றாலும் இப்படியா கிடப்பாள்? இப்போது போர்வையை விலக்கி சாந்தவியின் பின்னங்கழுத்தில் கேசங்களை முகர்ந்துகொண்டே முத்தமிட்டான்.

ஏ.சி-யின் குளுமையில் பின்னங்கழுத்து செழிப்பேறிக் கிடந்தது. குடித்த மதுவும் கொஞ்சம் மினுமினுப்பை ஏற்றியிருந்தது. முத்தம் பெற்ற சாந்தவி, ‘ப்ச்’ என்று முணுமுணுத்தாள்.

அவளுக்கு சண்டையைத் தொடர்வதா, தள்ளிவிட்டுப் பிரிவதா, சமாதானத்தை ஏற்றுக்கொள்வதா என்று அரைத் தூக்க குழப்பம் மேலிட்டது. எல்லாவற்றையும் தாண்டி இப்போது தூங்கினால் நிம்மதியாக இருக்கும். தூங்கி எழுந்தபின் யோசித்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள்.

விதேஷ் விடுவதாக இல்லை. பின்னங்கழுத்தில் இருந்து, போட்டிருந்த டாப்ஸை லூஸாக்கி கீழே இறங்கினான். பளிச்சென்ற முதுகில் இருந்த பூனைக்கேசங்களை ஆராய்ந்தான். சாந்தவியின் பனி முதுகில் பற்தடங்களை பதித்து செம்முதுகு ஆக்கிக்கொண்டு இருந்தான்.

பின்பு விதேஷ், சாந்தவியின் முகத்துக்கு நேராக முகத்தை வைத்துக்கொண்டு, “ஐ லவ் யூ சோ மச் சாந்தவி. என்னை மன்னிச்சுடு” என்றான். மீண்டும் முத்தமிட்டான்.

“வாய் ஸ்மெல் அடிக்குது விதேஷ். பல் தேய்ச்சிட்டு, குளிச்சிட்டு, பிரேக் ஃபாஸ்ட் சாப்டுட்டு, அப்புறமா மன்னிப்புக் கேளு, இப்ப நான் தூங்கணும். டோண்ட் டிஸ்டர்ப் மீ” என்றாள்.

“சாந்தவி ப்ளீஸ்” என்றான் அடிபட்ட விதேஷ்.

“மன்னிப்பு வேற, ரொமான்ஸ் வேற. அது என்ன தடவிக்கிட்டே மன்னிப்பு கேக்கறது? தடவற மூடு வந்துட்டா, மன்னிப்பா? வெட்கமா இல்லை? இது தேவடியாத்தனம் தானே” என்றாள் சாந்தவி.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017