மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

18 மில்லியன் ரீட்விட்ஸ் கேட்கும் இளைஞர்! காரணம்?

18 மில்லியன் ரீட்விட்ஸ் கேட்கும் இளைஞர்! காரணம்?

அமெரிக்காவில் உள்ள நேவடாவைச் சேர்ந்த கார்ட்டர் வில்கர்சன் என்னும் 16 வயது இளைஞர் அதிக ரீட்விட்ஸ் பெற்ற ட்விட்டர் பதிவை முறியடிக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு முறியடிப்பதன் மூலம் ஓராண்டுக்கு அவர் இலவசமாக சிக்கன் நக்கட்ஸ் பெற முடியும்.

பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ள எலென் டிஜெனெரெஸ் 2014ஆம் ஆண்டு ஆஸ்கர் விழாவின்போது பிராட்லி கூப்பருடன் எடுத்துகொண்ட செல்ஃபியால் தற்போது 3.3 மில்லியன் ரீட்விட்ஸுடன் முன்னிலையில் உள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 11) வரை கார்ட்டர் அவரது கோரிக்கை மூலம் 2.6 மில்லியன் ரீட்விட்ஸ் பெற்றுள்ளார். அவர் முந்தைய சாதனையை முறியடிக்க இன்னும் ஒரு மில்லியன் ரீட்விட்ஸ் மட்டுமே உள்ளது.

கடந்த வாரம் முந்தைய புதன்கிழமை (ஏப்ரல் - 5), ஓராண்டுக்கான இலவச சிக்கன் நக்கட்ஸை பெற எந்த அளவுக்கு ரீட்விட்ஸ் தேவைப்படும் என வெண்டீ’ஸ் ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு ட்விட் செய்திருந்தார்.

18 மில்லியன் ரீட்விட்ஸ் என வெண்டீ’ஸ் ஃபாஸ்ட் ஃபுட் கடையிடம் இருந்து பதில் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த கார்ட்டர், சிக்கன் நக்கட்ஸ் பெற எனக்கு உதவுங்கள் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

முதலில் இதை விளையாட்டு என கருதியவர்கள் ஸ்க்ரீன் ஷாட்டை பார்த்த பிறகு அவருக்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

கார்ட்டரின் கோரிக்கை கூகுள், அமேஸான், யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் பல நிறுவனத்தில் வைரலாக பரவி வருகிறது. அவர்களும் ரீட்விட் செய்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சிக்கன் நக்கட்ஸ்களை சாப்பிடுவதை விட இதற்கு வேறு ஒரு நல்ல காரணம் உள்ளது. கார்ட்டர் ஒரு புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளார். அதில் ஓராண்டு பெறும் சிக்கன் நக்கட்ஸ்களை நக்கட்ஸ் ஃபார் கார்ட்டர் டி-ஷர்ட்ஸ் (#NuggsforCarter T-shirts) என விற்பனை செய்ய உள்ளார்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 14 ஏப் 2017