மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

கூலித் தொழில் செய்யும் தெலங்கானா முதல்வர்!

கூலித் தொழில் செய்யும் தெலங்கானா முதல்வர்!

ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பின்பு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றவர் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ்.

பல அதிரடி நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை அடிக்கடி அறிவித்து வரும் அவர், தற்போது இரண்டு நாள்களுக்குக் கூலித் தொழிலாளியாக வேலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். மேலும், அவரது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இவரைப் போன்று இரண்டு நாள்களுக்குக் கூலி வேலை செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இவர் எடுத்திருக்கும் இந்த முடிவுக்குக் காரணம், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை தெலங்கானா ராஷ்டிரியா சமிதியின் ஆண்டு விழா நடைபெறுகிறது. எனவே அதற்கு நிதி திரட்டுவதற்காக இந்தப் புதிய முயற்சியை சந்திரசேகர் ராவ் ஆரம்பிக்கிறார். இதனால், வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து சந்திரசேகர் ராவின் கட்சிக்காரர்கள் அனைவரும், இரண்டு நாள்கள் கூலி வேலையில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017