மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

இன்றைய ஸ்பெஷல்: கடலை கறி!

இன்றைய ஸ்பெஷல்: கடலை கறி!

தேவையான பொருள்கள்

கறுப்பு கொண்டைக் கடலை – 1கப்

சின்ன வெங்காயம் (நறுக்கியது) – 1 கப்

தேங்காய் (துருவியது) – 1 கப்

கொத்தமல்லித் தூள் – 2 தேக்கரண்டி

வற்றல் பொடி – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி

கரம் மசாலா - ½ தேக்கரண்டி

தேங்காய் (துண்டுகள்) - ¼ கப்

தக்காளி (நறுக்கியது) - ¼ கப்

கறிவேப்பிலை,

கொத்தமல்லி இலை,

உப்பு,

எண்ணெய்,

கடுகு,

மிளகாய் வற்றல்,

இஞ்சி-பூண்டு (விழுது) - தேவையான அளவு

செய்முறை

கொண்டைக் கடலையை 10 மணி நேரம் ஊற வைத்து அதோடு உப்பு சேர்த்து வேகவைத்து தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவலைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி எடுக்கவும். அதோடு கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், கரம் மசாலா போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். அவற்றை விழுதாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும், பின்னர் கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு அது பொரியத் தொடங்கியதும் தேங்காய்த் துண்டைப் போட்டு நன்கு கிளறவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பின்னர் வெங்காயம், தக்காளியையும் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து மெதுவாக கிளறவும். பின்னர் அவித்து வைத்த கொண்டைக் கடலையை அத்துடன் சேர்த்து போதுமான நீர், உப்பு சேர்த்து நன்கு கிளறி வேக விடவும். பின்னர் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அவித்து வைத்த கொண்டைக் கடலையோடு சேர்த்து மேலும் நன்கு வேக விடவும்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 14 ஏப் 2017