மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அபராதம்!

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அபராதம்!

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்த தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மூலம் 18,179 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம், வைஃபை வசதி மற்றும் அதன் வேகம், குடிநீர் குழாய்களின் எண்ணிக்கை, கல்விக் கட்டணம், மாணவர் சேர்க்கை, வரவு செலவு போன்ற விவரங்களை வெளிப்படை தன்மையோடு அளிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. உத்தரவிட்டிருந்தது. இந்தத் தகவல்களை சி.பி.எஸ்.இ. வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த விவரங்களைத் தெரிவிப்பதற்கு கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 21 கடைசி தேதி என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு சில பள்ளிகள் தரப்பில் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

ஆனால், சி.பி.எஸ்.இ. விதிகளை பின்பற்றாமலும், தகவல்களை சி.பி.எஸ்.இ. வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமலும் இருந்த 2 ஆயிரத்து 77 பள்ளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017