மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

மதபோதகர் ஜாகீர் நாயக்குக்கு பிடிவாரண்டு!

மதபோதகர் ஜாகீர் நாயக்குக்கு பிடிவாரண்டு!

கடந்த வருடம் வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதிகளை ஊக்குவித்ததில் முக்கிய பங்கு ஜாகீர் நாயக்குக்கு உள்ளது என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது. எனவே இந்திய அரசிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டது. இதனையடுத்து இவ்விவகாரத்தை கையில் எடுத்த இந்திய விசாரணை முகமைகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

மதபோதகர் ஜாகீர் நாயக், தனது சர்ச்சைக்குரிய வெறுப்பு பேச்சுகள் மூலம் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, அவர் நடத்திவரும் தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்த அமைப்புக்கு ஐந்து ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. ஜாகீர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையைத் தூண்டுதல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கை தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்தது. தேசிய புலனாய்வு பிரிவு பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆர்-இல் ஜாகீர் நாயக் இஸ்லாமிய இளைஞர்களை பயங்கரவாத நடவடிக்கை மற்றும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017