மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

ரிலாக்சன்: வருமான வரித்துறைக்கு ஐடியா கொடுத்த வாணி ராணி!

ரிலாக்சன்: வருமான வரித்துறைக்கு ஐடியா கொடுத்த வாணி ராணி!

டி.வி-யில நியூஸ் பார்த்துக்கிட்டிருந்தேன். ‘ஏங்க... ரிமோட்டை கொடுங்க வாணி ராணி பார்க்கணும்’னு ஒரே நச்சரிப்பு. ‘இங்கே பாருடி, இங்கேயும் அதுதான் ஓடுது பாரு’னு மனைவிகிட்ட சொல்லிக்கிட்டே சரத் - ராதிகா ரெய்டு நியூஸைப் பார்த்துக்கிட்டிருந்தேன்.

அப்பத்தான் ஒரு சோர்ஸ் போன் பண்ணாரு... ரொம்ப சீரியஸாதான் பேசினாரு.

“அமைச்சர் விஜயபாஸ்கரைக்கூட இப்படி விசாரிக்கலை. ஆனா, ராதிகாவையும் சரத்குமாரையும் தொடர்ந்து விசாரிச்சு டார்ச்சர் பண்ணிட்டாங்களாம் வருமான வரித்துறையினர். முதல் நாள் விசாரணை முடிஞ்சதும் களைப்பான ராதிகா... ‘என்ன சார்..? இத்தோட முடிஞ்சுதா’னு லேசா புன்னகைச்சுக்கிட்டே கேட்டாராம்”.

‘‘ஓ... அதுக்கு அதிகாரி என்ன சொன்னாராம்?”

‘‘என்ன மேடம்..? முடிக்கிற மாதிரி கொண்டு வந்து டப்புன்னு, தொடரும்னு டெய்லி வாணி ராணில போடுற நீங்களே இப்படி கேட்கலாமா? சொல்லப்போனா... உங்கக்கிட்ட நடக்குற சீரியல் விசாரணைக்கு வாணி ராணியும் ஒரு காரணம்”னு சொல்லிட்டாராம்.

“அப்படிப் போடு....அப்புறம்?”

“பி.ஜே.பி-யோட கூட்டணிக் கட்சிக் கூட்டம் டெல்லியில அடுத்த வாரம் நடக்குதாம். தமிழ்நாட்டை அடுத்து என்ன பண்ணலாம்னு அந்தக் கூட்டத்துல ஆலோசிக்கிறாங்களாம். இந்தக் கூட்டத்துல எடுக்கிற முக்கிய முடிவுகளை வெச்சு அடுத்த கட்ட பரபரப்பு தமிழ்நாட்ல இருக்கும்னு சொல்றாங்க. தமிழ்நாட்ல பி.ஜே.பி-க்கு இப்ப கூட்டணிக் கட்சி யாருன்னு தலையை பிய்ச்சுக்காதீங்க. தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறைன்னு பி.ஜே.பி-யோட முக்கியமான மூணு கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்காம். இப்போதைக்கு இவங்கதான் தமிழ்நாட்ல பி.ஜே.பி-க்கு கூட்டணிக் கட்சி”.

“அடுத்த முக்கியமான நியூஸ்.”

“இப்போதைக்கு அரசியலுக்கு வர விருப்பம் இல்லன்னு புரட்சிப் போராட்டம் புகழ் பிரபு சொல்லியிருக்காரு. ஆஹா... அப்படியே ஒரு வேளை வந்துட்டாலும் எப்படி நடந்துக்கறதுன்னு சீனியர் சரத்குமார் அண்ணனோட போன் நம்பரை வாங்கி பிரபுக்கிட்ட கொடுங்கப்பா. நல்லா கேட்டு தெரிஞ்சுக்கட்டும்”.

பை...

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017