மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

உலக சித்தர்கள் தினம் இன்று!

உலக சித்தர்கள் தினம் இன்று!

சித்த மருத்துவம் தந்த சித்தர்களை நினைவுகொண்டு வணங்கி நோயற்ற வாழ்வு வாழ உறுதி கொள்ளும் தினமே ஏப்ரல் 14.

♦ உலக சித்தர்கள் நாள் என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் 2009ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

♦ பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை சவால் விடும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு தரும் அதிசயத்தக்க மருந்துகளை, உணவு பொருள்களை, மூலிகைகளை நமக்கு அடையாளம் காட்டி மருந்தாக்கி நோய் தீர்க்கும் கலையை மருத்துவத்தை வழங்கிய மகான்கள்தான் சித்தர்கள்.

♦ எந்தவித அறிவியல் உபகரணங்கள், ஆராய்ச்சிகள், ஆய்வுக்கூட வசதிகள் இல்லாத காலங்களிலேயே அதிசயிக்கத்தக்க வகையில் நோய்களை கண்டறிந்து முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தனர் சித்தர்கள்.

♦ முக்காலமும் அறிந்த சித்தர் பெருமக்கள், நாளொன்றுக்கு நாம் சுவாசிக்கும் எண்ணிக்கையை வைத்தே காலத்தைக் கணித்திருக்கிறார்கள்.

♦ சித்தர்கள் ஆராய்ச்சி செய்து வெளிப்படுத்தியதுதான் சித்த மருத்துவம். தவவலிமை, யோகா போன்ற ஒழுக்கம் நிறைந்த கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சித்தர்கள். பிற உயிரினங்களுக்கு உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டபோது அதற்குரிய மூலிகைகளை தங்கள் ஞானசக்தியால் கண்டு, அந்த நோய்களுக்கு மருந்து அளித்திருக்கிறார்கள். ஓலைச்சுவடிகளில் பதித்திருக்கிறார்கள். இன்றும் மூலிகைகளைக்கொண்ட மருத்துவத்துக்கு தனிமதிப்பு உண்டு. பக்கவிளைவுகளின்றி மூலிகைகளைக் கையாண்டு பல நோய்களுக்கு சித்தர்கள் நிவாரணம் கண்டிருக்கிறார்கள்.

♦ கூடுவிட்டுக் கூடுபாய்வது, ஆகாயத்தில் பறப்பது, மருத்துவம், ஜாலம், பூஜாவிதி, ஜோதிடம் சிமிழ் வித்தை, சூத்திரம், சிற்ப நூல் மாந்திரீகம், சூட்சும ஞானம், தீட்சாவிதி, யோகஞானம், திருமந்திரம், ரசவாதக்கலை போன்றவையெல்லாம் சித்தர்களுக்கு கைவந்த கலையாகும். ஒரே சமயத்தில் நான்கு இடங்களில் காட்சிதந்த சித்தர்களும் உள்ளனர்.

♦ அதேபோல் இரண்டு மூன்று இடங்களில் சமாதியான சித்தர் பெருமக்களும் உள்ளனர். சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் பெரும்பாலும் கோயில்கள் அமைந்துள்ளன. அவை இன்றளவும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.

♦ மருந்துகள் மட்டுமன்றி பத்திய முறைகள், யோகம், வர்மம், கொக்கணம் போன்றவைகளும் சித்தர்கள் வகுத்த நோய் தீர்க்கும் வழிகளாகும். கலப்படமில்லாத உணவு, கள்ளமில்லா மனது, உடல் உழைப்பு, மன மகிழ்ச்சி ஆகியவற்றைக் கடைபிடித்தால் நாமும் சித்தர்கள் போன்று மரணத்தை வெல்லலாம்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017