மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

ஐந்து எம்.எல்.ஏ-க்கள் போனால் ஆட்சியே போய்விடும்: எம்.எல்.ஏ. மிரட்டல்!

ஐந்து எம்.எல்.ஏ-க்கள் போனால் ஆட்சியே போய்விடும்: எம்.எல்.ஏ. மிரட்டல்!

‘அதிமுக அம்மா அணியிலிருந்து ஐந்து எம்.எல்.ஏ-க்கள் வெளியேறினால் ஆட்சியே கவிழ்ந்து விடும்’ எனப் பேசி சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

கடந்த 10ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் சாமளா புரத்தில் நடைபெற்ற டாஸ்மாக் போராட்டத்தின்போது அந்த வழியாக சென்ற சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜை பொதுமக்கள் முற்றுகையிட்டு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனால் எம்.எல்.ஏ. கனகராஜும் போராட்டத்தில் கலந்துகொண்டு டாஸ்மாக்குக்கு எதிராக போராடியுள்ளார்.

போராட்டம் முடிந்து எம்.எல்.ஏ. சென்றபிறகு பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். அப்போது ஏடிஎஸ்பி கனகராஜன் ஒரு பெண்ணை அறைந்ததில் அந்தப் பெண்ணின் காது கேட்காமல் போய்விட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏடிஎஸ்பி-யை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழ்நிலையில், ஏப்ரல் 13ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், “இந்தத் தொகுதியில் 2 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். எனக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் வாக்காளர்கள்தான் ஓட்டு போட்டனர். மற்றவர்கள் எல்லோரும் எனக்கு எதிராகத்தான் உள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்புதான் நான் அதிரடியாகப் பேசுகிறேன் என்கிறார்கள். அது தவறு. நான் எப்போதும் உண்மையை எடுத்துக்கூற தவறியதில்லை. எனது தொகுதி மக்களின் பிரச்னையைத் தீர்க்காவிட்டால் ராஜினாமா செய்து விடுவேன். வேறு அணிக்குப் போய்விடுவேன் என தொடர்ந்து மிரட்டி வருவதாக கூறுகிறார்கள். நான் யாரையும் மிரட்டவில்லை. அந்தந்தக் காலகட்டம் வரும்போது எல்லாம் தானாக நடக்கும். எனக்கு கட்சியில் எந்த நெருக்கடியும் இல்லை. மக்களிடம்தான் நெருக்கடி உள்ளது. நான் மக்களின் பிரதிநிதி. மக்கள் சொல்வதை அரசிடம் எடுத்து சொல்வது எனது வேலை. பிரச்னையைத் தீர்த்து வைக்கும்படி அரசிடம் கூறுவேன். நிலைமை மோசமாக இருந்தால் அதுபற்றியும் அரசிடம் விளக்கி கூறுவேன். நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கம்தான். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். இன்னும் ஐந்து எம்.எல்.ஏ-க்கள் போனால் ஆட்சியே போய்விடும்” என்றார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017