மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு வராது: வெங்கய்யா நாயுடு

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு வராது: வெங்கய்யா நாயுடு

‘மின்னணு வாக்கு இயந்திரங்கள் நம்பகத்தன்மையற்றவை. அவற்றில் முறைகேடு செய்ய முடியும்’ என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக மின்னணு ஓட்டு இயந்திரங்களை கைவிட்டுவிட்டு பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஏப்ரல் 12ஆம் தேதி நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தின.

சமீபத்தில் நடந்து முடிந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபரிமிதமான வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் தன்மை குறித்து ஏகப்பட்ட கேள்விகளை பகுஜன் சமாஜ் கட்சியும், ஆம் ஆத்மியும் எழுப்பின. இந்நிலையில் 2013ஆம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தவர், தான் வாக்களித்த சின்னத்துக்குத்தான் வாக்குப் பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்கும் காகிதப்பதிவு முறையையும் சேர்க்க வேண்டும் என்று வழிகாட்டியிருந்தது உச்சநீதிமன்றம். அந்த வழிகாட்டுதலை பின்பற்ற உத்தரவிடுமாறு பகுஜன் சமாஜ் கட்சி தற்போது உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது.

இதனையடுத்து ஏப்ரல் 13ஆம்தேதி நடைபெற்ற வாதங்களை முன்னிட்டு நீதிபதி செலமேஸ்வர் தலைமை அமர்வு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்குப்பதிவு எந்த சின்னத்துக்கு சென்றுள்ளது என்பதை வாக்காளர்களே சரிபார்க்கும் காகிதப்பதிவு முறையை சேர்க்காதது குறித்து விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று மூத்த வழக்கறிஞர் பி.சிதம்பரம், “ஒரு மனிதன் கண்டுபிடித்ததை அடுத்தவர் ஹேக் செய்ய முடியும். நான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நான் விரும்பும் சின்னத்துக்கான பொத்தானை அழுத்துகிறேன். ஆனால், இயந்திரம் அதை எப்படி பதிவு செய்தது என்பதை நான் அறிய முடியாது. வாக்காளரின் விருப்ப வாக்குதான் பதிவாகியுள்ளதா என்பதை வாக்காளர்கள் ஒருபோதும் அறிய முடியாது” என்றார். எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்காளர் தான் பதிவு செய்த சின்னத்தில்தான் வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்கும் காகிதப் பதிவு முறை கட்டாயமாகிறது. இதுமட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்” என்ற பி.சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.

“தற்போதைய மாநிலங்களவை பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி செய்திருந்த மனுமீதுதான் உச்சநீதிமன்றம் 2013ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தை காகித சரிபார்ப்பு முறையை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியது. மேலும் சர்ச்சை ஏற்படும்போது வாக்குகளை சரிபார்க்கவும் முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. எனவே வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி இயந்திரத்தையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் சேர்க்க வேண்டும்” என்று வழக்கறிஞர் பி.சிதம்பரம் வலியுறுத்தினார். “ஆனால், இதற்கு ரூ.3000 கோடி செலவாகும். இப்போது நிகழ்ந்து வரும் நடைமுறைகளைப் பார்த்தால் 150 ஆண்டுகள் ஆனாலும் சரிபார்ப்பு முறை வரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றே தெரிகிறது” என்றார் அவர்.

“தென் அமெரிக்காவைத் தவிர வேறெங்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை” என்று காங்கிரஸ் சார்பில் வாதாடிய கபில் சிபல் தெரிவித்தார். இதற்கு உடனடியாக பதில் அளித்த நீதிபதி செலமேஸ்வர், “நான் கூறுவது தவறாக இல்லையெனில், இவிஎம் இயந்திரங்கள் உங்கள் கட்சியால்தான் அறிமுகம் செய்யப்பட்டது” என்றார். மேலும் இவர் கூறும்போது, “வாக்குச்சாவடிகளை முற்றுகையிட்டு வாக்குப்பெட்டிகளைத் தூக்கிச்செல்வது போன்ற தீமைகளைக் களையத்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது” என்றார்.

இதற்கு பதில் அளித்த பி.சிதம்பரம், “விஞ்ஞானம் முன்னேறிவிட்டது அதனால் ஹேக்கிங் நடைபெறுகிறது” என்றார். இதனையடுத்து மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில், மின்னணு இயந்திர வாக்குப்பதிவு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017