மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம்!

டாஸ்மாக்  எதிர்ப்பு போராட்டம்!

தமிழகம் எங்கும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரியலூர் தாமரைக்குளத்தில் உள்ள அதிமுக கொறடா ராஜேந்திரன் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளில் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் பெரும் விபத்துகள் நிகழ்வதாக கூறி நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குட்பட்ட மதுபானக் கடைகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் அக்கடைகளின் ஊழியர்கள் தங்களுக்கு மாற்று பணிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களைச் சுற்றியுள்ள கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிலர், கடைகளின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் அருகே சாமளாபுரம் அய்யன்கோயில் சாலையில், புதிதாக டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் மீது திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஓங்கி அறைந்ததால் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண் பலத்த காயம் அடைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017